Monday, September 23, 2013

அரண்டவன் கண்ணுக்கு .............


அது ஒரு
எதிர்பாராத தோல்வி !

முயற்சியில்
வெற்றி கிட்டவில்லை !
நொண்டிச் சமாதானங்கள்
மனதில் ஒட்டவில்லை !

வெற்றி மட்டும்
வாய்த்திருந்தால்.............

விதி
மாறியிருக்கும் !
வாழ்வானது
வசந்தத்தில்
ஏறியிருக்கும் !

ஆகிவிட்டதே நிலை
பரிதாபமாக !
ஏதாவது செய்வானா
இறைவன்
பரிகாரமாக ?

தொடங்க வேண்டும்
அனைத்தையும்
சுழியிலிருந்து !
உயர வேண்டும்
மீண்டும்
அதள பாதாளக்
குழியிலிருந்து !

என்ன செய்து
மனதை
மாற்றலாம் ?
என்னை நானே
எப்படித்
தேற்றலாம் ?

மது ...........
அது
புளித்துப் போன
பழைய போதை !

சூது ........
வேண்டாம் ! வேண்டாம் !
நான்
துரியோதனனுமில்லை !
எந்தச் சகுனியும்
கூடயில்லை !

மாது ..........
அட !
இதைக் கொஞ்சம்
யோசித்துத்தான் பார்ப்போமே !
மன்மதனைச் சற்று
வாசித்துத்தான் பார்ப்போமே !

எதிர்த்த வீட்டு
ஆண்ட்டி
எடுப்பாகத்தான் இருக்கிறாள் !

பச்சை சிக்னல்
காட்டுகிறது
பக்கத்து வீட்டு
பருவச் சிட்டொன்று !

எங்கேயோ
கிண்டியில்
ஒரு அழகு நிலையமாம் !

கொட்டுகிறதாம்
அங்கே
இன்பத்தின் அருவி !
கொண்டாடுகிறார்களாம்
உடம்பை
எண்ணைகொண்டு உருவி !

ஆம் !
கட்டாயமாக .....
ஆடவற்குப்
பெண்டிர் !
பெண்டிற்கு
ஆடவர் !

அப்புறம்
இந்த பீட்டர் ............

வகை வகையாய்
வைத்திருக்கிறான்
எண்களை !
தர வாரியாகப்
பிரித்திருக்கிறான்
பெண்களை !

பேச மட்டுமே
செய்வாளாம்
ஒரு மாது !
சூடேறி விடுமாம்
காமத்தில் காது !

இன்னொருத்தி ,

தொடமட்டும்
தருவாளாம்
அனுமதியை !
கொஞ்சம்
கூடக் கொடுக்கவேண்டுமாம்
வெகுமதியை !

மற்றொருத்தி ,

காட்டுவாளாம்
கண் முன்னே
சொர்க்கத்தையே !
நிற்க வைப்பாளாம்
வரிசையில்
ஆண் வர்க்கத்தையே !

இப்போதைக்கு
ஆரம்பிப்போம்
பேச்சிலிருந்து !
சூட்டை உணர்ந்தேன்
வெளியான என்
மூச்சிலிருந்து !

ஒரேயொரு
குறுஞ்செய்தி !

வந்து விட்டது
எண் !
காட்டி விடுமோ
கயமைத் தனத்தைக்
கண் ?

கைகள்
தன்னிச்சையாய்
நடுங்கின !
மனசாட்சி
மண்ணாங்கட்டியெல்லாம்
உள்ளத்துள் ஓரமாய்
ஒடுங்கின !

சட்டென்று நான்
அவளைப் பார்த்தேன் !

அவள் ...........
என் மனைவி !

இல்லை
அவள் கழுத்தில்
பொன்னகை !
ஆனாலும்
அவளுதட்டில்
புன்னகை !

கையில்
அலைபேசி !

ஆ .......!

என் சோகத்தில்
அவளுக்கும்
இருக்கிறதே 
பங்கு !
உள்ளத்தில்
விழுந்தது
சந்தேகம் எனும்
கங்கு !

சோகத்தை ஆற்ற
என்னைப் போலவே
அவளும் .............

எனக்கு ஒரு
பீட்டர் என்றால்
அவளுக்கு ஒரு
ரோசி ?????

ஐயகோ...............

அப்படியேதும்
இருக்கக் கூடாது
ஆண்டவா !
முடி செலுத்துகிறேன்
என்று நான்
வேண்டவா ?

மனம்
அலறியது
கல்லடி பட்ட
நாயாக !
தெரியத்தான்
தெரியும்
அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம்
பேயாக !

அடுத்த கணமே ..........

காமம் எனும்
மீசையை
ஒட்டு மொத்தமாய்
மழித்தேன் !
உடனடியாய்
அந்த எண்ணை
அலைபேசியினின்று
அழித்தேன் !

அமைதியானது
உள்ளம் !
காணாமல் போனது
கள்ளம் !

மனைவியைப் பார்த்து
அமைதியாகக் கேட்டேன் .........

" பவித்ரா
ஒரு கப் காபி கிடைக்குமா ? "


6 comments:

 1. அலை பாய்ந்த மனதும் கட்டுப்படுத்திய விதமும் கவிதையில் விளையாடிய எழுத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மேலான கருத்துக்கு நன்றி சுரேஷ் !

   Delete
 2. //அமைதியானது உள்ளம் !
  காணாமல் போனது கள்ளம் !//

  சிறந்த ஆக்கம். கடைசியில் நல்லதொரு முடிவு ;) பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களைப் போன்றோரின் விமர்சனத்தால் எனது பேனா இன்னும் சற்று பொறுப்புணர்வு கொள்ளட்டும் !

   Delete
 3. நமக்கு சொந்தமானது மட்டுமே நமக்கு உரிமையானதும்...

  ReplyDelete
  Replies
  1. சொந்தமானது மட்டுமே உரிமையானது ! சொந்தமாக என்று எதுவுமே இல்லையென்றால் .................சும்மா தமாசுக்கு !

   கருத்துக்கு நன்றி !

   Delete