Skip to main content
படைப்பு





ச்சை !
சத்தியமாய்
அது ஒரு
படமில்லை !
அந்த நடிகனுக்கு
இனி என் மனதில்
இடமில்லை !

வெடித்தே விட்டது
தலை !
வெறுத்தே விட்டது
கலை !

அந்த இயக்குநனுக்கு
சுத்தமாய் இல்லை
டேஸ்ட் !
மொத்தமாய்
மூன்று மணிநேரம்
வேஸ்ட் !

இடைவேளை
வருவதற்குள்
முடிந்து விட்டன
இரண்டு மூன்று
யுகங்கள் !
கடித்துத் துப்பியே
காணாமல் போயின
கைவிரலின்
நகங்கள் !

ஆறுதல்
தரவில்லை
பாட்டு கூட !
அதை விட
இனிமையாய்
ஒலிக்கும்
தீபாவளி வேட்டு கூட !

படம் பார்த்தே
பலருக்கு வந்தது
காய்ச்சல் !
படம் முடிந்ததும்
தியேட்டரை விட்டு
அனைவரும் ஒரே
பாய்ச்சல் !

சத்தியமாய்
அது இல்லை
சினிமா !
சொல்லப்போனால்
அது
மூன்று மணிநேர
எனிமா !

போய் விட்டது
முன்னூறு ரூபாய்
தண்டமாக !
அரங்கை விட்டு
வெளியே வந்தோம்
கழுத்தறுந்து
முண்டமாக !

தன் பங்கை
நண்பன்
நிச்சயமாக
தருவானா ?
இனி நான்
படத்திற்குக்
கூப்பிட்டால்
வருவானா ?

இணையத்தில்
கண்டபடி
கிழித்திருந்தார்கள் !
மொத்த மதிப்பெண்ணில்
எண்பது விழுக்காட்டைக்
கழித்திருந்தார்கள் !

முன்னரே
விமர்சனத்தை
வாசித்திருக்கலாம் !
போவதற்கு முன்
கொஞ்சமாவது
யோசித்திருக்கலாம் !

ஒரு வழியாய்
வீடு வந்தபோது,
சோர்ந்து அமர்ந்திருந்தான்
சித்தப்பா பையன் !

அவனுக்கு
வயது
பத்து தான் !
படிப்பில் அவன்
சுடர்விடும்
முத்து தான் !

கேட்டதில்
பள்ளியில் ஏதோ
போட்டியாம் !
ஓவியம்
வரைய வேண்டுமாம் !

" ப்பூ.... இவ்வளவுதானா ?
கண்ணா ..........
நான்
கரைத்துக்
குடித்தவன்
கலைமகள் எழுதிய
காவியத்தை !
இதோ தீட்டுகிறேன்
காகிதத்தில்
ஓவியத்தை ! "            என்றேன்


" பெண்ணை
வரையலாமா ?  "
என்றதற்கு,
" சரி " என்றான்
சுட்டிப் பையன் !

மகிழ்ச்சியில்
வாயில் வரவில்லை
வாக்கியம் !
கிடைத்தது
காதலியை வரையும்
பாக்கியம் !

எடுத்தேன்
காகிதத்தை !
தொடுத்தேன்
பேனா எனும்
ஆயுதத்தை !

முதலில் முகம் !
வட்டமாய்
வரைய நினைத்து
கொஞ்சம்
நீள்வட்டமாய்ப்
போய் விட்டது !
முகம்,
வட்டமாய்த் தான்
இருக்கவேண்டும் என்று
சட்டமா என்ன !

பிறை நிலா போல
வரைய முனைந்தேன்
நெற்றியை ! 
வெற்றி கிட்டவில்லை !

அடுத்து கண் !
அதையாவது
அழகாய் வரையும்
என் நினைப்பில்
விழுந்தது மண் !
மை கொட்டி
அங்கே  ஆனது
புள்ளியாய்
ஒரு புண் !

மச்சம் என்று
சொல்லி
சமாளித்து விடலாம் !

அடுத்து ,
புருவம் கொஞ்சம்
நீண்டு விட்டது !
உயிரிழந்து
அந்த ஓவியம்
மாண்டு விட்டது !

அடுத்தது மூக்கு !
அச்சச்சோ !
பெரிதாகப்
போய் விட்டதே
ஓட்டை !
விட்டு விடுவேனோ
நான்
ஓவியத்தில்
கோட்டை !

அடுத்து
வாய் ஆனது
சப்பையாக !
எறியத்தான் வேண்டும்
இனி
இக்காகிதத்தைக்
குப்பையாக !

ஒரு நப்பாசையில்
வரைந்த ஓவியத்தை
தம்பிப்பயலிடம்
காட்டினேன் !

அவன்
ஒரே வார்த்தையில்
சொன்னான் !

" ச்சீச்சீ.....
இந்தப் படம்
நல்லாயில்ல "

வெறும்
அரைமணிநேர
சிரத்தை தான் !
ஆனாலும்
ஆனாலும்
அது
வலித்தது !







Comments

  1. அவரவர் படைப்பு அவரவர்க்கு அழகுதான்! அதை எளிமையாக புரிய வைத்த பாங்கு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி ! கவிதையின் கருத்தை உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே

      Delete
  2. திரைப்படத்தையும் படத்தையும் - இரண்டும் சரியில்லை...

    வரிகளை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர் வாசிப்புக்கு நன்றி தனபாலன்

      Delete
  3. #வெறும்
    அரைமணிநேர
    சிரத்தை தான் !
    ஆனாலும்
    ஆனாலும்
    அது
    வலித்தது !#
    அவரவரின் உழைப்பு அவரவர்க்கு அழகுதான். மைதானத்தில் விளையாடுபரைப் பார்த்து எளிதாகக் குறை கூறிவிடலாம். இறங்கி ஆடினால் தான் தெரியும் அதன் போக்கு. அருமையான வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு பாராட்டியதற்கு நன்றி தோழி

      Delete
  4. நல்ல பதிவு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி நண்பரே

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர