Skip to main content
வேதாளம்





அது ஒரு
விரும்பத்தகாத
விபத்து !
விளையாடிவிட்டது
விதி வாழ்வில்
உரத்து !
வற்றி விட்டது
உடம்பில்
சுரத்து !
குறைந்து விட்டது
குருதியின்
வரத்து !

உடைந்து விட்டது
எலும்பு !
அடங்கி விட்டது
அலும்பு !

ஒரு எட்டு கூட
நடக்க முடியவில்லை !
துணையின்றி
இம்மியளவும்
கடக்க முடியவில்லை !
பாழும் உடம்பை
மூலையில் போய்
முடக்க முடியவில்லை !
அழுகை வந்தால்
அணு அளவும்
அடக்க முடியவில்லை !

உணவு
பிடிக்கவில்லை !
காதலி
கசந்து விட்டாள் !
தொலைகாட்சி
திகட்டிப் போனது !
அலைபேசி
அநாதையானது !

அன்று .........
நடந்து என்ன ?

பலநாட்களாக
பின் தொடரப்பட்டவள்
புன்னகைத்து விட்டாளென்று
பார்ட்டி வைத்திருந்தான்
பாழாய்ப் போன நண்பன் !

விருந்தை
மருந்து போல
அருந்தலாமென்றுதான்
போயிருந்தேன் !

போதையில்
கண்ணும் தெரியவில்லை !
மயக்கத்தில்  ஒரு
மண்ணும் தெரியவில்லை !

அளவுக்கு
மீறி விட்டது !
ஒட்டு மொத்தமாய்
ஏறி விட்டது !

வாகனத்தை
அணுகிய போது
குறைவாய்க் குடித்தவன்
உதவ வந்தான் !

அவனிடம்,

" போடா பேமானி
யாரையும் நான்
அண்டியில்லை !
நான் ஒட்டாவிட்டால்
இது என்
வண்டியில்லை ! "

என்று,

நானே
எடுத்தேன் !
எடுத்தவுடன்
வேகத்தைத்
தொடுத்தேன் !

லாரியொன்றை
முந்த நினைத்து,

உள்ளங்கையை
இறுக்கினேன் !
உந்து விசையை
முறுக்கினேன் !

குறுக்குச்சாலை
குறுக்கிட்டதை
கவனிக்கவில்லை !

கடங்கார
கார்க்காரன்
கண்ணிமைக்கும் நொடியில்
காரியத்தைக்
கெடுத்தான் !

அப்புறம்
நடந்தது
நினைவில்லை !

விழித்துப்பார்த்தால்
சுற்றிலும் ஒரே
மருந்தின்
வாசம் !
நல்ல வேளை
உடம்பில்
ஓடிக்கொண்டிருந்தது
சுவாசம் !

வலது காலை
அந்தரத்தில் தூக்கிக்
கட்டியிருந்தார்கள் !
குடித்து விட்டு
ஒட்டியதற்குக்
கண்டபடி
திட்டியிருந்தார்கள் !

ஆறுமாதம்
அஞ்ஞாத வாசம் !

ஒருவழியாய்
மீண்டு வந்து
மீண்டும் அலுவலகம் !

யாவரும்
வருந்தி வருந்தி
நலம்  விசாரித்தார்கள் !
துருவித் துருவி
நடந்த விபத்தின்
குலம் விசாரித்தார்கள் !

" குடித்தேன்
இடித்தேன்
துடித்தேன் " - என
முடித்தேன் !

காலம்
சக்கரமாய்
உருண்டு போனது !
விபத்தின்
ஞாபகம் மனத்திரையில்
இருண்டு போனது !

ஒரு
வியாழக்கிழமை
பார்ட்டிக்கு அழைத்தான்
பக்கத்து இருக்கைக்காரன் !

" அக்கா மகள்
சமைந்து விட்டாளாம் ! "

மறுக்கத்தான்
நினைத்தேன் !
ப்ச் !
முடியவில்லை !



Comments

  1. மறுபடியும் 'விபத்து' தேவையா...?

    ReplyDelete
    Replies
    1. மனம் ஒரு குரங்கு என்பதை விட, பழையபடியே முருங்கை மரம் ஏறிவிடும் வேதாளம் ! என்னதான் பட்டாலும் அது திருந்தாது ! என்பதையே இக்கவிதை உணர்த்துகிறது தனபாலன் ! தொடர் வாசிப்புக்கு நன்றி !

      Delete
  2. அருமை நண்பா இன்றைய இளைங்கர்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு பதிவு .......துக்கம் என்றாலும் சந்தோசம் என்றாலும் தயங்காமல் விஷம் அருந்துகிரார்கலே இவர்கள் மரணத்தை எதிர்நோக்கும் ஞானியோ என்று கூட தோனுகிறது .........சமீபமாக என் முகப்பில் உங்கள் பதிவுகள் வரவில்லை என்ன காணம் தெரியவில்லை இனி தொடர்ந்த படிக்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...