Skip to main content
பிரிந்த காதலி





 
அவளை
அந்தப் பேருந்தில்
பார்ப்பேனென்று
நான் நினைக்கவில்லை !

அவள்
அப்படியே தானிருந்தாள் !

காதோரத்தில்
அதே
சுருண்ட முடி !

தலைகுளித்த
அதே
ஒற்றைப் பின்னல் !

சூடப்பட்ட
அதே
ஒற்றை ரோஜா !

அந்த
பச்சை நிற
சுடிதாரை
எனக்குப்
பரிச்சையமிருக்கிறது !

மெட்டியில்லா
அவள்
பாதங்களைக் கண்டு
நான் ஏன்
ஆறுதல் அடைகிறேன் ?

மனதுக்குள்
மீண்டும்
மழை பெய்ய
ஆரம்பித்தது !

வருஷங்கள்
கடந்தும்
என்னைச் சுற்றி
மீண்டும் ஒரு
வசந்தம் குட்டியாய் !

அவள்
இன்னும் என்னைப்
பார்க்கவில்லை !

திறந்திருந்த
ஜன்னலில்
வெளியை
வெறித்துக் கொண்டிருந்தாள் !

இப்போதெல்லாம்
அவள்
இசை கேட்பதில்லை
போலும் !

இறுதியாக
நிகழ்ந்த
அந்த கடைசிச்சந்திப்பு
ஆயுளுக்கும்
மறக்காது !

என்னருகே
ஒட்டிநின்ற
அந்த பருவப்பெண்ணை
உரசாமல்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு
விலகி நின்றேன் !

ஏதோ
எங்கள்
பழைய காதலுக்கு
நான் செலுத்தும்
என்னால் இயன்ற
மரியாதை !

சுற்றிலுமிருந்த
ஆண்களிடமிருந்து
தன் காதலியை
அடைகாத்துக் கொண்டிருந்தான்
ஒரு காதலன் !

சட்டென்று
அவனுக்காக
என் கண்கள்
ஈரமாயின !

ஒருகாலத்தில்
நானும்
என் காதலியை
அப்படி
அடைகாத்தவன் தான் !

பிரிந்த
காரணங்களைப்
பட்டியல் போட
விருப்பமில்லை !

ஏதோ
நிறுத்தத்தில்
பேருந்து நின்றது !

அவள்
இன்னும் திரும்பவில்லை !

நடத்துனர்
விசில் ஊதினார் !

உள்ளுணர்வு
சொல்லியிருக்கவேண்டும் !
சட்டென்று
அவள்  திரும்பி
என்னைப்
பார்த்து விட்டாள் !

அட சட் !

அது
அவளில்லை !

அவளைப் போன்ற
 சாயலில்
எவளோ !

கொஞ்சம்
நிம்மதியாகக் கூட
இருந்தது !

பெருமூச்சு
விட்டேன் !

பேருந்து
ஓடிக்கொண்டிருந்தது !

பழையபடி
திரும்பிக் கொண்டாள்
அவளைப் போலிருந்த
அந்த அவள் !

அவசரப் பட்டு
அந்த
அலைபேசி எண்ணை
அழித்திருக்க வேண்டாம் !


என்றாவது ஒருநாள்
பார்த்து விடலாமென்று
பார்ப்பவர்களிடமெல்லாம்
தேடிக் கொண்டிருக்கிறாளோ
என்னைப் போலவே
அவளும் !

Comments

  1. காட்சிகள் கண் முன் தெரிய வைக்கும் வரிகள்...

    தேடிக்கொண்டு இருக்கலாம்... அப்படி நினைத்தும் சந்தோசப்பட்டும் கொள்ளலாம்...

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தனபாலன் ! நான் உங்கள் பக்கத்தை வாசிக்கிறேனோ இல்லையோ, நீங்கள் என் பக்கத்தை தொடர்ந்து வாசிப்பது மகிழ்வாக இருக்கிறது !

      Delete
  2. என் தோழன் இன்றுதான் பிரிந்து போன தன் காதலியின் எண் கிடைத்திருக்கிறது பேசலாமா என்றான் சந்தோஷமோ, துக்கமோ இன்றி சலனமில்லாமல் பேசு என்றேன் அவளின் வாழ்வும் உன் வாழ்வும் பாதிக்காமல் என்றேன். உங்கள் கவிதையைப் படித்தவுடன் நாங்க பேசிட்டோமே என்ற அவனின் குதூகல வார்த்தைகள் என் காதில் மறுபடி ஒலிக்கிறது. எல்லா இடத்திலும் இப்படி ஒரு தேடல் இருக்கத்தான் செய்கிறதோ?

    ReplyDelete
  3. ஒரு காதலி, தோழியாக அறிமுகமாகி, பிறகு காதலியாகி சந்தர்ப்பவசத்தில் பிரிந்து மீண்டும் எப்போதாவது சந்திக்கும் போது பழையபடி தோழியாகவே மாறி விடுகிறாள் ! அவளை தோழியாகவே பாவிப்பது தான் நல்லது ! இதை உங்கள் நண்பர் புரிந்திருப்பார் ! கருத்துக்கு நன்றி தோழி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர