Skip to main content
நிலா



நிலா,
அன்பின் சின்னம் !
வான் இலையின்
ஒரு கரண்டி அன்னம் !
பாற்கடலில் இருந்து
பிய்ந்து வந்த பின்னம் !
வான் போர்வைக்குள்
ஒருக்களித்த தேவதையின்
ஒரு பக்கக் கன்னம் !

நிலா........
வெண்மை ..............
பால் ................
பசி .................
அம்மா !

நிலவைப் பார்த்து .
எழுதாதவன்
கவிஞன் இல்லை !
நிலவைப் பார்த்து
மகிழாதவன்
மனிதன் இல்லை !

கவிஞர்கள் செய்கிறார்கள்
கவிதை விற்பனை !
அதற்கு மூலதனம் - அவர்கட்கு
நிலவு தரும் கற்பனை !

உறவுகளைப்
பிரிந்து போகும்
ஒவ்வொரு பயணத்திலும்
கூடவே வருவது
நிலவு மட்டுந்தான் !

நிலவிருக்கும் வரை
எவனும் இங்கு
அநாதை இல்லை !

நிலவோடு சிறிது
உலவிவிட்டு வரலாம்
உறக்கம் வராதவர்கள் !

கவலைகளால்
பசியெடுக்காதவர்கள்
மொட்டை மாடியில்
நிலாச் சோறு உண்ணலாம் !

வானப் பூந்தோட்டம்,
நட்சத்திரப் பூக்கள்,
இரவுத் தேன் !
வெள்ளைப் பொன்வண்டு
நிலா !

வான்குளம்,
நட்சத்திர மீன்கள்,
வெள்ளைத் தாமரை
நிலா !

வான மைதானம்
நட்சத்திர வீரர்கள்
வெள்ளைப் பந்து
நிலா !

உலகுக்கே
பாசப் பசியாற்றும்
ஒரு சொட்டுத் தாய்ப்பால்
 நிலா !!!

Comments

  1. நிலாவைப் பற்றிய உங்கள் பா மிக அழகு. முதல் சில வரிகளைப் படித்ததும் ‘சினிமாவுக்கு பாட்டெழுத ஏற்ற கவிஞர்’ என்று நினைத்தேன். மற்றவற்றைப் படி்த்து முடித்ததும் உங்களின் எழுத்துத் திறனை வியக்கிறேன். தொடரட்டும் நற்கவிதைகள்!

    ReplyDelete
  2. //ஒவ்வொரு பயணத்திலும்
    கூடவே வருவது
    நிலவு மட்டுந்தான் !

    நிலவிருக்கும் வரை
    எவனும் இங்கு
    அநாதை இல்லை !//

    இந்த வார்த்தைகளைப் படிக்கும் பொழுது இனம் புரியாத ஒரு சந்தோசம் வருகிறது.

    உங்களை ஐந்தாவதாக பின்தொடர்கிறேன், இனி தொடர்ந்து வருகிறேன். அருமையான கவிதை மனம் உங்கள் வசம் இருப்பதால் உங்கள் வலைபூ அழகாய் மணம் வீசுகிறது

    ReplyDelete
  3. ஐயா திரு கணேஷ்,

    முதலில் எனது வலைப்பூவிற்கு வருகை தந்த தங்களுக்கு நன்றி ஐயா ! நீங்கள் எல்லாம் எனது வலைப்பூவைப் பார்வை இடுகிறீர்கள் எனும் போது என் பொறுப்புணர்ச்சி சற்றே கூடியது போலவே உணர்கிறேன். சமூகத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைபாடு பற்றிய விரக்தியான மனநிலையையே இதுவரை அதிகமாக எனது கவிதைகளில் பதிவு செய்து வந்தேன். இனி அதைக் கூடுமானவரை குறைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

    ஒரு ஆசிரியர் போலுள்ள தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருகை தந்து எனது கவிதையைப் பாராட்டியதை நான் பெற்ற விருதாகவே கருதுகிறேன். நன்றி ஐயா !!!

    ReplyDelete
  4. சீனு குரு,

    /ஒவ்வொரு பயணத்திலும்
    கூடவே வருவது
    நிலவு மட்டுந்தான் !

    நிலவிருக்கும் வரை
    எவனும் இங்கு
    அநாதை இல்லை !// - இவ்வரிகளின் யதார்த்தத்தை ரசித்த தங்களுக்கு நன்றிகள். யதார்த்தமான வரிகள் தான் வாசகரின் மனதைத் தொடுகின்றன என்பதை உணர்த்தும் விமர்சனமாக தங்கள் விமர்சனம் இருந்தது. நன்றி

    ReplyDelete
  5. வாவ்! நிலவுக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்... குழந்தைக்கு சோறூட்ட, காதலியை எண்ணிக் கவிதை பாட், இரவில் உறுத்தாத வெளிச்சத்தையும், பார்ப்பவர்களுக்கு மகிழ்வையும் தர... என்று எத்தனை நிலா! எனக்குப் பிடித்தது நிலாவும் மழையும். (மழையில நனைஞ்சு மம்மிட்ட அடிவாங்கின விஷயம்லாம் நான் சொலல மாட்டேன்பா) இங்க நிலாவ ரசிச்சதுல சந்தோஷம். நன்றி உங்களுக்கு.

    கவிதைக்கு மட்டும் நன்றி இல்லை... என் சிந்தனையை பயன்படுத்தினா நல்ல எழுத்தாளராகலாம்னு எனக்கு எனர்ஜி டானிக் தந்ததுக்கு, அப்படி தறி கெட்டு ஓடின கற்பனைலதான் எருமை பத்தின கதை வ்ந்தது, இனியும் முயல்கிறேன் உங்களின் ஆதரவோடு. Thanks for everything!

    ReplyDelete
  6. குரு ஸார்... கணேஷ் அங்கிளின் வருகைக்கே இவ்வளவு சந்தோஷப்படறீங்களே... ரெண்டு நாள் முன்னால வலைச்சரத்துல உங்கள் பதிவைப் பத்தி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தாரே... பாக்கலையா நீங்க. இதோ லிங்க் :

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_06.html

    ReplyDelete
  7. நிலாப்பெண் அவளுக்கு தாங்கள் சூடிய அலங்காரம் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு!
    அருமையான படைப்பு!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நிரஞ்சனா, மற்றும் யுவராணி தமிழரசனுக்கு நன்றிகள் பல.

      Delete
  8. தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள எனது வலைப்பூவிற்கு தங்களை அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in

    ReplyDelete
  9. நிலா,
    அன்பின் சின்னம் !
    வான் இலையின்
    ஒரு கரண்டி அன்னம் !
    பாற்கடலில் இருந்து
    பிய்ந்து வந்த பின்னம் !
    வான் போர்வைக்குள்
    ஒருக்களித்த தேவதையின்
    ஒரு பக்கக் கன்னம் !//

    அருமை அருமை
    வித்தியாசமான அசரவைக்கும் அருமையான கற்பனை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வெர்ட் வெரிஃபிகேசனை நீக்கினால்
    பின்னூட்டமிடுபவர்களுக்கு
    கொஞ்சம் சிரமம் குறையும்
    விரும்பினால் நீக்கவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர