Skip to main content
குறிப்பு : ஒரு பாமரனின் கண்ணோட்டத்தில் தான் இந்தக் கவிதை எழுதப்
பட்டுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. அப்படி
ஏதும் இருந்தால் சுக்கிர பகவானே எனை மன்னித்து விடு !


காட்சிப் பிழைகள்



அது ஒரு
பேருந்து நிறுத்தம் !

பகல்,
பத்துமணி இருக்கும்
பத்தடி தூரத்தில்
அவள் வந்து நின்றாள் !

பருவம் தான்
உள்ளம் உதறவைக்கும்
உருவம் தான் !

நானும் அவளும்
தனித்திருந்தோம் !
சூழலுக்கு இதமாய்
இனித்திருந்தோம் !

வெட்ட வெளியை
வெறித்தபடி
வெறுமனே நின்றாள் !

நேர்ப்பார்வை
பார்ப்பவள்  - திரும்பியொரு
கூர்ப்பார்வை
பார்த்தாளென்றால்
வேர்வரை அது பாயுமே !
ஏக்க அலை ஓரளவாவது ஓயுமே !

பாரடி ! பாரடி !
பைங்கிளி ! பைங்கிளி !

இரு ! இரு !  - கொஞ்சம்
பொறு ! பொறு !
பார்ப்பாள் ! பார்ப்பாள் !
இளமைக்கு நீர்தன்னை
வார்ப்பாள் ! வார்ப்பாள் !

எனக்கு நானே
வேதம் ஓதினேன் !
பொறுமையிழந்து
உஸ்ஸ்  என்று
காற்று ஊதினேன் !

திருப்பதி பகவானே
திருப்பம் தா !
அவளுக்கு எனைப் பார்க்கும்
விருப்பம் தா !

திரும்பத் திரும்ப
வேண்டிக் கொண்டு
திரும்பிப் பார்த்தேன் !
திக் என்றது !

பத்து வினாடியில்
பத்தடி இடைவெளியை
சத்தமின்றி
நிறைத்திருந்தனர்
நாகரிக " நந்த கோபாலன்கள் ! "

அனைவரும்
இளைஞர்கள் !
அநியாயத்துக்கு
அழகர்கள் !

ஒருவன்
பாட்டுக் கேட்டான் !

ஒருவன்
பாக்கு மென்றான் !

ஒருவன்
புன்னகைத்தான் !

ஒருவன்
பல்லிளித்தான் !

அத்தனை
பிரயத்தனங்களையும்
அவர்கள் அவளை நோக்கியே
பிரயோகித்தனர் !

பளிச்சென்று
அவள் திரும்பினாள் !
பாக்கு மென்றவனைப்
பார்வையால் மென்றாள் !
புன்னகைக் குழந்தையை
இன்னுதட்டில் ஈன்றாள் !

அவள்,
தலை கோதினாள் !
உத்தேசமில்லாமல்
உதடு குவித்தாள் !
உடை சரிசெய்வது போல
உள்ளதைக் காட்டினாள் !

அவனவன்
சித்தம் கலங்கிப்
பித்தம் பிடித்துப்
பைத்தியமானோம் !
அவள் ஆசை நோய்க்கு
அப்போதைக்கு
வைத்தியமானோம் !

அப்போது,

எங்கிருந்தோ ஒரு
பைக்குக்காரன் வந்தான் !
பைங்கிளியை ஏற்றினான் !
பைபாஸ் நோக்கி
பையப் பையப் பறந்தான் !

காதலனோ ?
கொண்டவனோ ?
கண்டவனோ ?

நாங்கள்
இன்னமும் இருந்தோம் !

சொறிநாய் ஒன்று
சொய்ங் என்று
சிறுநீர் கழித்தது !

எனக்கான பேருந்து
எப்போதோ போய்விட்டது !

இன்னொன்று வர
இருபது நிமிடமாகும் !

அப்போது,

இன்னொருத்தி வந்தாள் !
சுடிதாரில் இருந்தாள் !
கழுத்தைச் சுற்றிய
துப்பட்டா
காற்றில்  படபடத்தது !
அவனவனுக்கு அங்கே
இதயம் தடதடத்தது !

சட்டென்று நான்
தெருவில் இறங்கினேன் !

வேகாத வெயிலில்
வேகவேகமாய்
வீடு நோக்கி
விறுவிறுவென்று நடந்தேன் !!!




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...