Skip to main content
பிழைப்பு


மூன்று மணிக்கு

முந்தி எழுந்து ,


காபி குடித்து

கண்ணுறக்கம் தொலைத்து ,


காலைக் கடன்களைக்

கடிதே முடித்து ,


வெள்ளாவி வெந்நீரை

விரலிடுக்கில்

விளாவிக் குளித்து ,


அழுக்கு சீருடையை

அலுக்காமல் அணிந்து கொண்டு ,


தூக்கத்தில் திளைக்கும்

அறை நண்பனை

ஏக்கமாய்ப் பார்த்துவிட்டு ,


கலைத்து விடாமல்

கதவைச் சாத்தி ,


வெளியே வந்து

விதியை நொந்து ,


நிறுத்தத்தில்

நின்றபடியே

நேரம்போகக் காத்திருந்து ,


தொழிற்ச்சாலை ஊர்தியில்

சிறைச்சாலைக் கைதி போல ,


விடுபட்ட உறக்கத்தை

வழிநெடுக விரட்டிப் பிடித்து ,


வளாகம் வந்ததும்

விரைந்து இறங்கி ,


வரிசையில் நின்று

வருகையைப் பதிந்து ,


அதிகாலை இட்டிலியை

அரைவயிற்றில் அடைத்து விட்டு ,


இரவுப் பணியாளனிடம்

இறுதி நிலவரம் இயம்பக் கேட்டு ,


விட்டுப் போன பணிகளைத்

தொட்டுத் துலக்கி தூசி தட்டி


சமயம் வாய்த்தபோது

சாயவிருக்கையில் சாய்ந்துறங்கி ,


போன பொழுதுணர்ந்து

பதறி எழுந்து ,


பாதிப் பணியின்

மீதி முடித்து ,


மேலதிகாரியின்

முறைப்பை

முகத்தில் வாங்கி ,


ஓய்வு இன்றி

ஆய்வு செய்து ,


உடல் நோக

உள்ளம் சாக ,


இட்ட வேலையை

ஓட்ட முடித்து ,


வசதி வாய்த்தால்

வம்பு பேசி வம்பு வளர்த்து ,


அந்தி சாய்வில்

அலுவல் முடித்து ,


அயர்ந்து போய்

அறைக்குத் திரும்பி ,


தானே சமைத்து

தானே உண்டு ,


திரும்பவும் படுத்து

திரும்பவும் எழுந்து ,


மற்றுமொரு நாளை

மறுபடியும் தொடங்கி ,


...............................................

...............................................

...............................................


இப்போதெல்லாம்

தெரு நாயைப் பார்த்தால் கூட

சற்று பொறாமையாய் இருக்கிறது !!!

















Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர