Skip to main content
குறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் எனக்கு எழுதியனுப்புங்கள்.





கடைக்காரன் 



அவன்,
கடைக்காரன் !
செம்மாந்த
நடைக்காரன் !
வெண்மைநிற
உடைக்காரன் !

அவன்,
ஐம்பது கடந்த
முதியவன் !
நான்
அந்த வீதிக்குப்
புதியவன் !

நான் ???

அதொன்றுமில்லை !

வந்தது
ஓலை !
அழைத்தது
ஆலை !
கிடைத்தது
வேலை !

வணங்கினேன்
அன்னையை !
வந்தடைந்தேன்
சென்னையை !

உடனடித்தேவையெல்லாம் ...........................

காலடிக்குத்
தடம் !
தங்குவதற்கோர்
இடம் !
நீர் பிடிக்கக்
குடம் !
பழனி முருகன்
படம் !

யாவருக்கும்
என்
முகம் தெரியாது !
நான்
அப்பாவியென்ற
என்
அகம் தெரியாது !

அவ்விடத்தே
எனக்கு
நண்பர்கள்
இல்லை !
ஊரோடு முடிந்தது
என் நட்பின்
எல்லை !
இங்கே நான்
கேட்க முடியாது
' மச்சி ' என்ற
சொல்லை !

அவ்விடத்திற்கே
ஆலையின்
வண்டி வரும் !
பத்துக்கல்
கடந்து போனால்
பக்கத்திலே
கிண்டி வரும் !

என்ன செய்வது ?
யாரைக் கேட்பது ?

தலையைச்
சொறிந்தேன் !
பார்வையை
எறிந்தேன் !

கடையொன்றைப்
பார்த்துவிட்டேன் !
உடனடியாக
மூக்கினில்
வேர்த்துவிட்டேன் !

கடைக்காரன்
காலாட்டிக்கொண்டிருந்தான் !
தன்னைத்தானே
தாலாட்டிக்கொண்டிருந்தான் !

ஆம் !
அதே கடைதான் !
அதே உடைதான் !
அவன்தான் !

' என்ன வேண்டும் '
என்றான் அவன் !

' ஐயா,
வீடு வேண்டும்
வாடகைக்கு !
மேலும் நான்
தனிதான் !
நான்கு பேரைச்
சேர்க்கவேண்டும்
இனிதான் ! '
- என்றேன் !

அவன் சட்டென்று
பேச்சிற்குத்
தடை போட்டான் !
பார்வையாலே
என்னை
எடை போட்டான் !

என்
அகத்தின் அழகு
அவன்
முகத்தில் தெரிந்தது !

புன்னகைத்தான் !

' இரண்டு பேர்
உள்ள அறையில்
மூன்றாவதாகத் தங்க
சம்மதமா ? ' என்றான் !

மூன்றாவது ........?
மூன்று ?

எனக்கு
ராசிதான்
மூன்று !
என்
பிறந்தநாளின்
கூட்டுத்தொகையே
அதற்கு நல்ல
சான்று !

சம்மதித்தேன் !
சேர்ந்துகொண்டேன் !

அவன்
சொல்லித்தான்
கிடைத்தது
அறை !
அதற்கவனுக்கு
காசு கொடுப்பதுதானே
முறை !

கொடுத்த பணத்தை
கடைக்காரன்
மறுக்கவில்லை !
அதற்காக
நான் அவனை
வெறுக்கவில்லை !

அதன் பிறகு
வாழ்க்கை
சேர்த்துக்கொண்டது
இணக்கத்தை !
பார்க்கும்போதெல்லாம்
வைத்தேன்
கடைக்காரனுக்கு
வணக்கத்தை !

போதாக்குறைக்கு
பக்கத்துவீட்டில்
ஒரு
சிட்டு !
அவ்வப்போது
சிரித்தது
பார்வையால்
என்னைத்
தொட்டு !

இப்படியே
வாழ்க்கை கொஞ்சம்
நடந்தது !
ஒருவருடம்
கடந்தது !

ஏதேனும் ஒரு
சம்பவத்தை
எதிர்பார்க்காதீர்கள் !

இத்துடன்
இக்கவிதை
முடியப்போகிறது !

ஒருநாள்
தெருவில்
நடந்து செல்கையில்
இருவர்
பேசிக் கொண்டிருந்தனர் !

ஒருவன்
அந்த வீதிக்குப்
புதியவன் !
ஒருவன்
ஐம்பது கடந்த
முதியவன் !

புதியவன்
புதியவன் தான் !

அந்த முதியவன் .............

ஆம் !

அவன்,
கடைக்காரன் !
செம்மாந்த
நடைக்காரன் !
வெண்மை நிற
உடைக்காரன் !



குறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் எனக்கு எழுதியனுப்புங்கள்

Comments

  1. அழகு நடைக் கவிதை!

    வரிகள் சொல்லிப்போனது வாழ்க்கை ஒரு சக்கரமே...

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. வாழ்க்கை ஒரு சக்கரம் என்ற ஒரு தத்துவார்த்த சரடு இக்கவிதையில் இழையோடுவதை உணர்ந்து சொன்ன தங்களுக்கு நன்றிகள் பல பல !

    வாழ்க்கை ஒரு சக்கரம் ! அந்தச்சக்கரத்தின் அச்சாணியாக ஒருசிலர் விளங்குகிறார்கள். நமக்கு, கடைக்காரனும் ஒரு அச்சாணிதான் !

    ReplyDelete
  3. அழகழகான அடுக்கு மொழிச் சொற்களாகப்போட்டு அசத்துகிறீர்கள். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. சுழற்சி அருமை...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி தோழி !

      Delete
  6. கவிதை சிறப்பு! எல்லாக் கவிதைகளையும் வாலி போல சந்த நயத்துடன் எழுதுவதை தவிர்க்கலாமே! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதற்காகவே இனி, வைரமுத்து மாதிரியும் எழுதுகிறேன் !

      ஆக, எல்லாமே மாதிரியாகத்தான் எழுத முடியும். நமக்கென்று எழுத்தில் தனி பாணி உருவாக, நாம் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் ! அப்போது நம்முடைய ராகம் நமக்கே கேட்கத்தொடங்கும் !

      முக்கியத்துவம் வாய்ந்த தங்கள் இந்தக்கருத்திற்கு நன்றி நண்பரே !

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர