Skip to main content
 சிறைவாசி





அவன்
சிறையில் இருந்து
வெளிப்பாட்டான் !

அவனுக்கு
அன்று
விடுதலை !

குற்றம் ?

நிதி
அவனை
மோசடி செய்தது !

எனவே

நிதியை
அவன்
மோசடி செய்தான் !

பலநாள் திருடன்
ஒருநாள்
அகப்படுவான் !

இவன் ,

சிலநாள் திருடன்
சீக்கிரம்
அகப்பட்டான் !

வாதாட
இவனிடம்
நிதியில்ல்லை !
எனவே
நீதி வென்றது !

சிறை,
இவனுக்கு ஆனது
அறை !

ஆறுவருடம்
சிறையில்
வனவாசம் !
இப்போது
தண்டனை முடிந்து
மீண்டும் இவனுக்கு
ஜனவாசம் !

வெளியே
வெயிலடித்தது !

அடுக்கிவிட்டது போல்
கட்டிடங்கள் !
முடுக்கிவிட்டது போல் 
வாகனங்கள் !

இவன்
வீடுசென்ற போது

சகோதரன்
செருப்ப்பைக் காட்டினான் !

தகப்பன்
தவறிவிட்டான் !

தாய்
முதியோர் இல்லத்தில் !

உறவுகள்
ஒன்றுகூடிக்
காறித்துப்பின !

அக்கம்பக்கத்தார்
அகதியைப் போலப்
பார்த்தனர் !

வேலைதேடிச்
சென்றவிடத்தில்
விரட்டியடிக்கப்பட்டான் !

அடுத்தவேளைச் சோறு
கேள்விக்குறியானது !

பிச்சையெடுப்பது குறித்து
மனதுக்குள்
பரிசீலித்தான் !

அதற்கு
சிறை செல்வதே
கௌரவம் என்று
தோன்றியது !

செய்ய
வேலை !

உண்ண
உணவு !

உடுக்க
உடை !

உறங்க
உறைவிடம் !

என்ன
தனிமை தான்
வாட்டும் !

இப்போதுமட்டும் என்ன
வாழுகிறதாம் !

இப்படியாக
இரண்டு நிமிடங்கள்
யோசித்தவன்

பக்கத்திலிருந்தவன்
பணப்பையைப்
பிடுங்கிக் கொண்டு 
வேகமாக
ஓடத் தொடங்கினான் !

அவன் நோக்கம்
திருடுவது அல்ல !
சிறை செல்வது !!!





Comments

  1. நல்லவனையும் சமூகம் மாற்றிவிடுவது கொடுமை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  2. கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர