Skip to main content
பிரம்மச்சாரி 4





வாழ்க்கையில்
ஒரு பெண்ணிடமும்
பேசியதில்லை !
பிச்சைக்காரியைக் கூட
கோபப்பட்டு
ஏசியதில்லை !
எந்தப் பெண்ணுக்கும்
மோகனப் புன்னகை
வீசியதில்லை !
நாணிக் கோணி
எவளும் எங்கள்முன்
கூசியதில்லை !

கடைக் கண்ணால் கூட
கன்னிகள்
எங்களைப்
பார்ப்பதில்லை !
காலைப் பிடித்துக்
கெஞ்சினாலும்
காதலை யாரும்
ஏற்பதில்லை !

அனுதினமும்
எதிர்பார்க்கிறோம் 
 வீட்டிலிருந்து ஓர்
நறுஞ்செய்தியை !
அனாமதேய
எண்ணுக்கெல்லாம்
அனுப்பிப் பார்க்கிறோம்
அர்த்த ராத்திரியில்
குறுஞ்செய்தியை !

ஆனாலும்
போராட்டம்
முடியவில்லை !
ஒரு பொழுது
எங்களுக்கு
விடியவில்லை !

அந்தஸ்து எனும்
சிவதனுஷை
எங்களில் யாரும்
உடைக்கவில்லை !
எங்களுக்கென்று
ஒருத்திகளை
பிரம்மன் இன்னும் 
படைக்கவில்லை !

எதிர்படும்
பெண்ணிடமெல்லாம்
பிசியாகவே இருக்கிறது
அலைபேசி !
திருமணச்சந்தையில்
எகிறிவிட்டது
மணமகள்களின்
விலைவாசி !

பட்டம் விடக்கூட
உதவுவதில்லை
படித்து வாங்கிய
பட்டம் !
பட்டம்
படித்தவனுக்கு
பெண் கிடைக்காதென்பது
இங்கு
எழுதப்படாத
சட்டம் !
பாதகமாகத்தான்
இருக்கிறது
ஜாதகத்தின்
கட்டம் !
பார்த்துப் பார்த்து
போரடித்து விட்டது
வீட்டிலிருக்கும்
விட்டம் !

அந்தஸ்து
பார்த்துத் தான்
காதலின்
மடை திறக்கிறது !
காசிருப்பவனுக்குத் தான்
காமனின்
கடை திறக்கிறது !

நாட்டமில்லை
எங்களுக்கு
பொன் பொருளில் !
ஆனாலும்
மேதைகளில்லை
நாங்கள்
மென் பொருளில் !

திருமணப் போட்டியில்
எவன் இட்டானோ
அந்தஸ்து எனும்
வரம்பை !
எங்கு போய்
அறுத்துக் கொள்ளலாம்
ஆண்மைத்தனத்தின்
நரம்பை !

ஊதியம்
நாற்பதாயிரத்தில்
பொறியாளனாக
பன்னாட்டு நிறுவனத்தில்
பணிபுரிவதுதான்
பத்தாம் வகுப்புப்
படித்தவளை
மணப்பதற்கான
குறைந்த பட்சத் தகுதியே !

ஆயிரம் பேரைப்
பார்த்து
நூறு பேரைத்
தேர்ந்தெடுத்து
பத்து பேரையாவது
காதலிக்கிறாள்
பெண் !
ஒரு பெண்ணைக்
காதலிக்க
ஆயிரத்தோடு ஒருவனாக
வரிசையில்
காத்திருக்கிறான்
ஆண் !

ஒரு ஜோதிகாவுக்கு
இங்கு
ஓராயிரம் சூர்யாக்கள்
அடித்துக் கொள்ள,
' கஞ்சா கருப்பு ' களான
எங்களுக்கு
கோவை சரளா கூட
கேள்விக் குறிதான் !

வெறும்
அறுபது நாள்
ஆசைதான் !
முப்பது நாள்
மோகம் தான் !
அதற்கா
இந்தக் கூப்பாடு ?
காசு கொடுத்தால்
கடையில் கூட
கிடைத்து விடுமே
சாப்பாடு !

ஆனால்,

உண்ட நிறைவில்
வயிறு குளிர்வதற்கும்,
உணவு செரிக்காமல்
வயிறு எரிவதற்கும்
வித்தியாசம் இருக்கிறது !!!








Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இப்ப என்ன சொல்றீங்க ஜாதகத்தை அனுப்புங்க.. அதில் நம்பிக்கையிருந்தால்.. இல்லை பயோடேட்டா அனுப்புங்க நாங்களாவது பொண்ணு பார்த்து கொடுத்துடறோம். எங்கள் நண்பர் புலம்பல் தாங்க முடியலை...

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கவிதையை பாசிடிவாக அணுகியதற்கு நன்றி தோழி ! நீங்கள் சொன்னதை சீரியசாக எடுத்துக் கொண்டு உங்கள் மின்னஞ்சலுக்கு எனது சுய விவரக் குறிப்புகளை அனுப்பியே விட்டேன். எப்படியெல்லாம் பெண் தேட வேண்டியிருக்கிறது பாருங்கள் !

      Delete
  3. பின்றீங்களே.... ரொம்ப நொந்துட்டீங்க போல...

    @ ezhil
    உங்களை வழி மொழிகிறேன் சகோ

    ReplyDelete
    Replies
    1. தோழி,
      நீங்கள் இந்தக் கவிதையைப் படித்துப் பின்னூட்டமிட்டது நான் செய்த பாக்கியம். மிக்க நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர