Skip to main content
என் மனதைத் தந்து விடாதே



கல்லூரி

முடிந்தமாலை வேளை !



நாம் இருவருமே

பேருந்துக்காகக் காத்திருந்தோம் !


மலர்க்கொத்து மகளிர் குழுவில்

நீ மட்டும் எனக்கு

ஒற்றை மலராய்

தனித்துத் தெரிந்தாய் !


பேருந்தைப் பார்க்கும் சாக்கில்

நான் உன்னைப்பார்த்தேன் !


என் பார்வையை

நீ உணர்ந்து விட்டதை

உன் கன்னச்சிவப்பு காட்டிக்கொடுத்தது !


என் காதுமடல் வெப்பத்தை விட

உன் இதயத்துடிப்பின் சத்தத்தை

அதிகமாய் உணர்ந்தேன் !


இளமையின்

இன்ப அழுத்தத்தை

இருவருமே அனுபவித்தோம் !


பார்த்துக்கொண்டே இருந்த என்னை

பளிச்சென பதிலுக்குப் பார்த்தாய்

என் பாதங்கள் பூமியைப் புறக்கணித்தன !


நம் பார்வைகள்

புணர்ந்து கொண்டதில் ,

குறுநகைக் குழந்தையை

இதழில் ஈன்றெடுததாய் !


நல்லவேளை நம்மைத்தவிர

நம்மை யாரும் கவனிக்கவில்லை !


நம்

பார்வைகள் தழுவிக்கொண்ட

பத்து வினாடிகளில்

பத்தாயிரம் முறை

புதிதாய்ப் பிறந்திருந்தேன் !


பாவை உந்தன்

பார்வையால் தடவப்பட்டு

பரிசுத்தனாய் மாறிப்போனேன் !


உன் தலையை வருடிக் கோதியபடி

என் உயிரை உருவி எடுத்தாய் !


"தொடர்ந்து பார் " என

கண்களால் கட்டளையிட்டேன் !


"பார்த்தது போதும் " என

பார்வையால் பதில் சொன்னாய் !


சட்டென்று

தலை நிமிர்ந்த நாணத்தால்

தலை குனிந்து தரையைப்பார்த்தாய் !


பேருந்து வந்தது

முன்படியில் நீ

பின்படியில் நான் !


உள்ளே நாம் பார்த்துக்கொள்ள

சந்தர்ப்பம் வாய்க்கவில்லை !


"அன்பே பறித்துக்கொண்ட

என் மனதை தயவு செய்து

திருப்பித்தந்துவிடாதே ! " என்று

மாலையில் இல்லம் திரும்பியதும்

காதல் புறாவின் காதில் சொல்லி ,

உன்னிடம் தூது அனுப்பினேன் !!!

Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது