Skip to main content
பயணங்கள் அலுப்பதில்லை








பேருந்து

ஆடி ஆடிச் சென்றது


தாலாட்டுத் தொட்டில் போல !




விடலைப் பெண்ணின்


தாவணித் துணியாய்


சாலைகள்


சீக்கிரம் நழுவின !




எங்களைப்


புறக்கணித்த புறவுலகம்


பின்னோக்கிப் பயணித்தது !




வெளியே


அந்தி மாலையின்


தங்க தரிசனம் !




மாலை நேர


சூரியக் குழந்தை


தவழ்ந்து தவழ்ந்து


தூங்கப் போனது !




வானப் போர்வையில்


முடங்கிப் போனாள்


நிலவுப் பாட்டி !


போர்வை போதவில்லை போலும்


பாதி நரை


பிறையாய்த் தெரிந்தது !




பருவம் வந்த


பாவை ஒருத்தி


பார்வையாலேயே


எனை விழுங்கப் பார்த்தாள்.


நல்ல வேளை


எங்கிருந்தோ பாய்ந்து வந்த


அவளின் சிவப்புக் காவலர்கள்


வேலிஒன்றை


வேகமாய்ப் போட்டனர் .


தலை குனிந்த


அவளின் காலடியில்


அழகாய்ப் பூத்திருந்தது


வெட்கக் கோலம் !!!




கிட்டே அமர்ந்த


கிழவி ஒருத்தி


காவிப் பல்லைக்


காட்டிச் சிரித்தாள் .


அந்தச் சிரிப்பின் மிச்சம்


அழகின் உச்சம் !!!






வீறிட்டழுத குழந்தை ஒன்று


எனைப் பார்த்து


அமைதியானது


அள்ளி எடுத்தேன்


அணைத்துக்கொண்டது !




இது போன்ற


சின்ன சின்ன


பேரின்பங்கள் உள்ளவரை


பயணங்கள் அலுப்பதில்லை !!!






















Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது