Skip to main content

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது .
மழைக்குடை இல்லாத நான்
நிழற்குடையில் ஒதுங்கினேன்.
சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை ,
ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் .
நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள்
நின்றிருந்தாள் .
பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை
எனக்குத தெரிந்தது .
அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன்
நல்லவேளை மணமாக வில்லை
என மனதும் ரணமாக வில்லை .
நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள்.
இன்னும் பார்தேன் சிவந்தாள்.
என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது .
இதயம் இடியாய்த துடித்தது
எங்கள் பார்வைகள் உரசியதில்
மின்னல் தெறித்தது .
அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் .
என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது .
என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது .
சற்றே கண்ணீர் வந்தது .
அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே
வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் ,
" அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று .
அதை கேட்டதும்
உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது
போல உணர்ந்தேன் .
மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் .
அந்த மழையில் இப்போது உயிர் இல்லை .
அது செத்துப பெய்து கொண்டிருந்தது .







Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
தாம்பத்யம் கடைசியில் நான் அவளை அறைந்து விட்டேன் ! அதிர்ச்சியில் அவள் உறைந்து விட்டாள் ! அதன் பிறகு மௌனம் ! ஊமையாகக் கண்ணீர் ! பார்வையில் ஈட்டி ! சூழலில் சூனியம் ! ச்சே ! அவளை அப்படி நான் அடித்திருக்கக்கூடாது ! அவளும் வார்த்தையால் என்னை இடித்திருக்கக்கூடாது ! நடந்தது நடந்ததுதான் ! கடந்தது கடந்ததுதான் !  அவள் அறைக்குள் சென்று முடங்கினாள் ! அழுது அழுதே  - கொஞ்சம் அடங்கினாள்  ! காரணம் இதுதான் ! உண்ணும் போதே நறநறத்தது பல் ! காரணம் பல்லில் இடறிய ஒரு கல் ! " ஏண்டி இவளே சமைக்க உனக்குத் துப்பில்லை ! சாம்பாரில் கூட உப்பில்லை !  "                 என்றேன். அடிபட்டவள் போல அவள் நிமிர்ந்தாள் ! " ஆமாம் ! ஆமாம் ! சமைக்க எனக்குத் துப்பே இல்லை ! வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் வேலைக்காரியை தப்பே இல்லை !"                  என்றாள். சைத்தானை அத்தோடு விட...