Skip to main content
காமத்தின் கடைசி எல்லை



அந்த வருடத்தை ,

அந்த மாதத்தை ,

அந்த நாளை ,

அந்த நிமிடத்தை ,

அந்த வினாடியை ,

அந்த கணநேரத்தை ,

மறக்கவா முடியும் ?


கல்லூரி வாழ்வின்

கடைசி நாள் .

நம்

மூன்று வருடக் காதலுக்கு

முடிசூட்டு விழா

அன்று தான் நடந்தது !


விளக்கில்லாத

வகுப்பறையில்

வசமிழந்த வசதியில்

நாம் மட்டும்

தனித்திருந்தோம் !


வெளியே பெய்த மழை

நமக்குள்ளும் !


நம் கண்களைத்

தழுவ விட்டதில்

தவழ்ந்து வந்தது

காமக் குழந்தை !


மழை பெய்தாலும்

அறையினுள்

அதிசய நிசப்தம் .

நமக்குள்ளே

விரகத்தின் சத்த !


நாம்

கைகளால்

முடிச்சுப் போட்டதில்

கற்பு கட்டவிழ்ந்தது !


உன் பெருமூச்சை

என் கழுத்தில்

பாய்ச்சினாய் !

ஓராயிரம் எரிமலையை

ஒரு சேர உணர்ந்தேன் !


உன் கண்களுள்

நுழைந்து

உனதுள்ளம் தொட்டேன்

நீயும் பதிலுக்குத் தொட்டாய் !


அது ,

ஒருவழிப்பாதை போலும் ,

வெளியேற வழியின்றி

தவித்துக்கிடந்தோம்

இருவரும் !


நாம்

ஒன்றிக்கலந்ததில்

நம்மிடையே

காற்றுக்கும் கட்டுப்பாடு !


நாம்

இணைந்து இழைந்ததில்

நம்முடைய

நாணங்களின் தட்டுப்பாடு !


நீ

போதும் என்றாய்

நான்

போதாது என்றேன்


நான்

வேண்டும் என்றேன்

நீ

வேண்டாம் என்றாய் !


விலகி விலகியே

விட்டுக்கொடுத்தாய் !


உயிர் மாற்று

அறுவை சிகிச்சையை

நாம் உதடுகளால்

நிகழ்த்தினோம் !


மன்மதப்பாதையில்

முத்தங்களால் பயணித்தோம் !


காமத்தின்

கடைசி எல்லையில்

காதலைக் கண்டோம்

மீண்டு வந்தோம் !


மழை

முடிந்த பொது

எல்லாம்

வடிந்தது !


விலகி அமர்ந்தோம் !


ஒருவரின்

உயிரை

ஒருவர்

உணர்ந்தபடி

பார்த்துக்கொண்டே இருந்தோம்

நாம்

பார்த்துக்கொண்டே இருந்தோம் !










Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது