Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பர்களுக்கு மட்டும் .............



காதல் மன்னர்கள்



ஆண்களால் ஆன

எனது தொழிற்ச்சாலை

காதலால் இயங்குகிறது !


அங்கே

ஒவ்வொரு ஊழியனும்

ஒரு காதலன் !

ஒவ்வொரு காதலனும்

ஒரு ஊழியன் !


என் அலுவலகத்தில்

இருக்கிறார்கள்

காதலின் கர்த்தாக்கள் !


இதயத்தை

சின்னமாகக் கொண்ட

காதல் மன்னர்கள்

சிலரைப் பற்றி இதோ.............


வினோபா ,

காதலில்

சோதனைகளை

அதிகம் பார்த்ததில்

அவன் ஒரு சாதனையாளன் !


கௌரி ஷங்கர் ,

காதல் சாம்பலில்

மீண்டும் உயிர்த்த

பீனிக்ஸ் பறவை !


அருள் முருகன் ,

காதலைப் போராடி வென்ற

கர்ம வீரன் !


ஜெகன் ,

விடலைப் பெண்களின்

உள்ளம் கவர்ந்த

வெள்ளை வித்தகன் !


மாணிக்கராஜ் ,

பேசிப் பேசியே

காதலைக் கனிவித்த

இன்சொல் அரசன் !


பீட்டர் ,

பைங்கிளிகளின்

பக்குவம் தெரிந்த

பண்பாளன் !


மனோஜ் ,

மலர்க்கொடிகளின்

மனம் கவர்ந்த

மன்மதன் !


ஹரி ,

கன்னிப் பெண்களின்

கனவு நாயகன் !


ராமதாஸ் ,

ஊடல் இருந்தாலும்

காதல் குறையாத

உத்தம புருஷன் !


பிரதீசும்

கருணாகரனும்

காதலியைக் கைப்பிடித்த

கண்ணியவான்கள் !


இந்தக் காதல் யுத்தத்தில்

களம் கிடைக்காத

நானும் தினேஷும் ,

துணைவிக்காக தவமிருக்கும்

விதியின்

விளையாட்டு பொம்மைகள் !!!








Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது