Skip to main content
கடைசியில் நானும் ....



பொதுவாக எனக்கு

கவிதையைப்பிடிப்பதில்லை !


என்னைப்பொறுத்தவரை

கவிதை என்பது

அழகான பொய்

பொய்யான அழகு !


முன்பெல்லாம் அது

எதுகைக்கும் , மோனைக்கும்

முடிச்சுப்போடும்

விததையாய் இருந்தது .


இப்போதோ

உரைநடைகளை

உடைத்து அடுக்கும்

விந்தையாகி விட்டது.


என்னைப்பொறுத்தவரை

கவிதைகள் யதார்த்தத்தின் எதிரிகள் .


அடுத்த வேளை சோற்றுக்கு

வக்கில்லாத எவனும்

வக்கனையாய் கவி பாட முடியாது .

பாரதியை விடுங்கள்

அவன் நியதிகளுக்கு அப்பாற்பட்டவன் .


இங்கு பெரும்பாலான கவிதைகள்

காதலைத்தான் மொழி பேசுகின்றன .


ஒரு மழை தூறும் மதிய வேளையில்

நீ என்னிடம் காதலைச்சொன்னாய்

மறுக்க எனக்கு தைரியமில்லை !


நாம் கடற்கரைகளில் காதலித்தோம் ,

மின்னஞ்சல்களில் நேசித்தோம் ,

செல் பேச்சுக்களுக்கு இடையே தான்

சிறிதளவு சுவாசித்தோம் !


ஒரு அந்தி மாலைப்பொழுதில்

நாம் இணைந்து இருந்த ஏகாந்த வேளையில்

நான் உன்னிடம் சொன்னேன் ,


" அன்பே ,

இனி இருட்டும் முன்பு

இல்லம் திரும்புவோம் " என்று .


நீ வழக்கம் போல

கண்களால் " ஏன் " என்றாய் .


நான் உன்னிடம் ,

" உனது அழகைப்பார்த்து

அவள் வெட்க்கித்தலை குனிந்து கொள்கிறாள் "

என்றேன் பிறை நிலாவைக்காட்டி !





Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது