Skip to main content
படைப்புலகப் பிச்சைக்காரன்


இப்போதெல்லாம்

பாடு பொருள்கள் கிடைப்பதில்லை !


கற்பனைகள்

வறண்டு விட்டன !


உவமைகள்

தீர்ந்து விட்டன !


மோனைகள்

முரண்டு பிடிக்க ,

எதுகைகள்

ஏளனம் செய்கின்றன !


வார்த்தைகளை

மாற்றிப் போட்டே

வண்டி ஓடுகிறது !


பக்கத்து மொழியிடம்

கடன் வாங்கித்தான்

பிழைப்பே நடக்கிறது !


மூளையைப் போலவே

மழுங்கிக் கிடக்கிறது

என் பேனாவின் முனையும் !


எனக்கும்

கசாப்புக்கடைக்காரனுக்கும்

வித்தியாசம் ஒன்றுமில்லை !

அவன் கூறுபோடுவது ஆட்டை !

நான் கூறு போடுவது பாட்டை !

அவன் கொல்வது கோழியை !

நான் கொல்வது மொழியை !


இதில் அவ்வப்போது

இலக்கியச் சேவை வேறு !


அறுபதுபக்கத்தொகுப்பில்

பொருளடக்கமே மூன்று பக்கம் !

அணிந்துரைகளும்

பொழிப்புரைகளும்

சேர்ந்தாற்போல இருபது பக்கம் !

இதில்

என்னுரை ஒரு

ஏழு பக்கம் !

கணக்கிடுங்கள்

கவிதைகள் எத்தனை பக்கம் ?

இதில் கொடுமை என்னவென்றால்

தலா ஒரு கவிதைக்கு

நான்கு பக்கம் என

நாசூக்காய் ஒத்துக்கியிருந்தேன் !


என்னை யாராவது கவிஞன்

என்றால் சிரிப்பு வருகிறது !


நான் சட்டைப்பையில்

குறிப்புத்தாளுடன் அலைகிறேன் !

எங்கேயாவது ,

எவனாவது ,

எதையாவது சொன்னால்

சடுதியில் குறித்துக்கொள்ள !


"படைப்புலகப் பிச்சைக்காரன் " என்பது

எனக்கு நானே வழங்கிய பட்டம் !


கொஞ்சம் இருங்கள் ..............


எனது அடுத்த கவிதை

இப்போது தயாராகி விட்டது .

வருகிறேன் !!!






Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது