Skip to main content
ஒரு பிரிவும் சில இதயங்களும் ......



ஒரு மாலை நேர மந்தகாச தனிமையில்

நாம் மறுபடி சந்தித்தோம் .


நான் வழக்கமாக புன்னகைத்தேன்

நீ மாறாக மௌநித்தாய் .


என்னை அழுத்தமாய்ப் பார்த்துக்கொண்டே ,

அந்த அழைப்பிதழை நீட்டினாய் .


அதில் , உன் பெயருக்குப்பக்கத்தில்

எவன் பெயரோ இருந்தது .


நான் அவஸ்த்தையாய் " ஏன் " என்றேன் ,

நீ அமைதியாய் " யதார்த்தம் " என்றாய் .


என்னிடம் இருந்த உன் இதயத்தை

நீ பிடுங்கிகொண்டதில் ,


உன்னிடம் இருந்த என் இதயம்

துடிப்பை நிறுத்தி இருந்தது .


அவனது புகைப்படம் காட்டினாய்

மாதச்சம்பளம் ஐந்து இலக்கம் என்றாய் .


கடைசியில் , நம் நான்கு வருட காதலை

நாசூக்காய் விற்றிருந்தாய் .


சிப்பந்தி வந்தான் . உன் அனுமதியுடன்

உனக்கான பணத்தையும் சேர்த்தே கொடுத்தேன்

ுகமாய் இருந்தது .


பிரியும் போது சொன்னாய்

" திருமணத்திற்கு வந்து விடாதே " என்று .

நான் வறட்சியாய் புன்னகைத்தேன் .


ஒரு சில நிமிடங்கள்

நாம் மௌனமாய் அமர்ந்திருந்தோம்

அது தான் நாம் நம் காதலுக்கு செலுத்திய

இறுதி அஞ்சலி .


தெருவில் நடந்து கொண்டிருந்தேன்

தள்ளுவண்டியில் கம்பளி ஆடை விற்றுக்கொண்டிருந்தார்கள்

அப்பாவுக்கு குளிர் தாங்காது என வாங்கிக்கொண்டேன் .


சிறிது தொலைவு நடந்ததில்

அம்மாவின் ஞாபகம் வந்து

ஆப்பிள் பழங்களை வாங்கினேன் . விரும்பி சாப்பிடுவாள் .


அடுத்த மாத சம்பளத்தில்

பள்ளி செல்லும் தம்பிக்கு ஒரு

மிதிவண்டி வாங்க முடிவெடுத்தேன்

பாவம் நடந்தே செல்கிறான் .


என் பழைய காதலியே ,

ஒரு வகையில் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் .


உன் பிரிவால் , என்னைச்சுற்றியுள்ள

பிற இதயங்களையும் நேசிக்க கற்றுக்கொண்டேன் .




Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...