Skip to main content
வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?



வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?

ஒரு நிமிடம் நில் !

நான் சொல்வதைக் கேள் !

நீ யார் என்கிறாயா ?

உனது நலம்விரும்பி

என்று வைத்துக்கொள்ளேன் .

என்ன விழிக்கிறாய் !

... நலம்விரும்பி என்பது

போன நூற்றாண்டோடு

வழக்கொழிந்த வார்த்தையாயிற்றே !

சரி ! இந்த நூற்றாண்டின் இறுதியோடு

அழியப்போகும் வார்த்தையைச் சொல்கிறேன் !

நண்பன் ! என்னை உனது நண்பன்

என்று வைத்துக்கொள்ளேன் !


எங்கே போகிறாய் ?

என்னது ! உறக்கத்தின் காதலியை

வாங்கப் போகிறாயா ?

.... மதுவா ?

மது - உறக்கத்தின் காதலி !

நல்ல உவமை !

நான் ஒன்று சொல்லவா ?

உறக்கத்திற்கு மனைவி

ஒருத்தி இருக்கிறாள் !

அவள் பெயர் உழைப்பு !

கைச்சிறையில் மனைவி

காத்திருக்கும்போது ,

காதலியை கடைகளில்

ஏன் தேடி அலைகிறாய் ?


இரவெல்லாம் பணி !

அயராத உழைப்பு !

முழுச் சூரியனை

முழுதாய்ப் பார்த்தே

மாதங்கள் மூன்று ஆகின்றன !

உனது புளித்த புத்திமதிகளை

போன நூற்றாண்டு பத்தாம் பசலிகளிடம்

வைத்துக்கொள் என்கிறாயா ?


உழைப்பு என்பது

மூளையின் மடிபையும் ,

பணத்தின் தடிப்பையும்

அதிகப்படுத்துவது மட்டுமல்ல !

அது ,

வியர்வையின் சொத்து !

உடல்நலத்தின் வித்து !


உன் உடம்பின்

கடைசி வியர்வையை

நீ எப்போது பார்த்தாய் ?

என்னது அப்படி ஒன்று

இருப்பதையே மறந்துவிட்டாயா ?

பரிணாம வளர்ச்சியில் ,

மனிதனிடமிருந்து காணாமல் போகக்கூடிய

உறுப்புக்களின் பட்டியலில்

வியர்வைச்சுரப்பிக்கே முதலிடம் !

இதயத்திற்குக் கூட இரண்டாமிடம் தான் !


உடல் வருந்திச் செய்யும்

எதுவுமே உழைப்புதான் !

நின்ற இடத்திலிருந்தே ஓடு !

குதி , குனி , நிமிர் !

கைகால்களை நீட்டி மடக்கு !

இருபது நிமிடங்கள் போதும் !

அன்றிரவு உறக்கம் வரவில்லைஎன்றால் ,

செருப்பால் என்னை அடி !


அடுத்ததாக ,

உனது அம்மாவை

கடைசியாக எப்போது நினைத்தாய் ?

கணக்கிடாதே ! அது ,

கடந்த வருடமாகக் கூட இருக்கலாம் !

காதலியிடம் நொடிக்கொருமுறை

சாப்பிட்டாயா ? சாப்பிட்டாயா ? என்று

உருகுகிறாயே !

அந்த வார்த்தையை

உன் தாயிடம் எப்போதாவது

கேட்டிருக்கிறாயா ?

இந்த உலகத்தில் எப்போதும்

உன் நலனை எண்ணியபடியே

வாழ அவள் ஒருத்தியால்

மட்டுமே முடியும் !

உறக்கம் வரவில்லைஎன்றால்

அவளிடம் ஐந்து நிமிடங்கள்

மனம் விட்டுப் பேசு !

மனங்குளிர்ந்த அவள் உள்ளத்தின் பூரிப்பு ,

உன்னைத்தாலாட்டித் தூங்கவைக்கும் !


உறக்கத்திற்கும் தாய்க்கும்

என்ன தொடர்பு என்கிறாயா ?

யுகம் யுகமாய் , தாய் தன் குழந்தையை

தாலாட்டித் தானே தூங்க வைத்தாள் !

அந்தத் தாலாட்டின் அதிர்வுகள் எல்லாம்

அண்ட வெளியில் உறைந்து போய்க் கிடக்கின்றன !

எங்கெல்லாம் தாயன்பு

என்கிற கதகதப்பு உண்டாகிறதோ ,

அங்கெல்லாம் அவை உருகி உருகி

பொழியத்தொடங்குகின்றன !

இது சொல்லப்படாத ஆனால்

நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை !


இதற்கு மேலும் நீ

மதுவைத் தேடித்தான் போவேன் என்றால் ,

உன் தாயிடம் ஒரு வார்த்தை

சொல்லி விட்டுப் போ !!!











Comments

  1. Uzhaippin unnathathai unarthum ithu nallathor kavithai... But it is age ji.. Antha antha vayasula manushan atha atha thedithan povan ( For Love)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...