Skip to main content
மன்னிக்காதே தாயே



இந்த நூற்றாண்டின்

இறுதி விவசாயி நான் !


மகன் மென்பொருள் மேதை !

மகள் அமெரிக்கப் பேதை !


அடுத்த தை வந்தால் ,

அகவை அறுபது !

பத்தினி போய்ச்சேர்ந்து

ஆகிவிட்டன ஆண்டுகள் இருபது !


இப்போதெல்லாம் நான் ,

பேச முடிந்த ஊமை !

கேட்க முடிந்த செவிடன் !

பார்வையைப்பற்றிக் கேட்கிறீர்களா ?

கண்களைத் தான்

தொலைக்காட்சிப்பெட்டிக்குத்

தாரை வார்த்துத் தந்துவிட்டேனே !


"ஒரு காலத்தில் ,

யானை கட்டிப் போரடித்தோம் !

கழனி கழனியாய்

உழவு செய்தோம் !

களம் களமாய்

நெல் குவித்தோம் !

இப்போதைய சாகுபடி என்ன ? "

முந்தாநாள் கனவில்

முப்பாட்டன் வந்து கேட்டான் !


விதை விதைத்தவன்

வீழ்ந்து விட்ட ,

நாற்று நட்டவன்

நாணிச் செத்த ,

நேற்றைய நிலவரத்தை

கடைசி வரை மறைத்துவிட்டேன் !


இப்போதெல்லாம்

அரிசிக்கு பதில் அசைவம் !

அதிகாலையில் ஆட்டிறைச்சி !

மதியத்தில் மாட்டிறைச்சி !

இராப்பொழுதில் இறால் , மீன் , நண்டு இத்யாதிகள் .....


மாட்டிறைச்சிக்கு மாற்றாய் ,

மனித இறைச்சி வருவதற்குள் ,

மாண்டு விட வேண்டும் !


வெளியே என் அன்னை

குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கிறாள் !

அவளைக்கூறு போட்டுக் கூவி ,

விற்கின்றன வியாபார நாய்கள் !


ஒரு காலத்தில் ,

பச்சை பச்சையாய்ப் பூத்தவள் !

வண்ண வண்ணமாய் விளைந்தவள் !

கார்மேகப் போர்வைக்குள்

மழைத்தந்தையுடன்

உறவாடிக்களித்தவள் !


தன் உதிரத்தை உணவாக்கி

உலகுக்கெல்லாம் ஊட்டி விட்டவள் !

தென்றலாய்த் தாலாட்டி

தரணியையே தூங்கச் செய்தவள் !


தங்கம் தங்கமாய்த் தந்தவள் - இப்போது

அங்கம் அங்கமாய் அறுபட்டுக்கிடகிறாள் !


அவள் பாகங்களைப்

பங்கு போட்டு பணம் பண்ணும்

பிசினஸ் புண்ணியவான்கள்

பயங்கரமாய்ச் சிரிக்கிறார்கள் !


என் அன்னை என்ன செய்வாளோ ?

பாவம் ! புழம்பித் தள்ள அவளிடம்

புழுதியும் மீதி இல்லை !

கதறியழ கண்ணீரில் ஈரம் இல்லை !

வெளியே சென்றால் ,

காப்பாற்றச் சொல்லி

தறுவாளே என நான்

வீட்டுக்குள்ளேயே சிறை இருக்கிறேன் !


அன்னையே ,

தாயே ,

அம்மா ,

என்போன்ற

மானங்கெட்ட மகன்களை

முடிந்தவரை மன்னிக்காதே !!!











Comments

  1. Ji... wonderfull...
    vegetation of Green soon will perish...
    Something has to be done

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...