Skip to main content
குறிப்பு : தமிழும் , தமிழ் கவிஞர்களும் என்னை மன்னித்து விடுங்கள்



கவிதை எழுதுவது எப்படி ?


அது ஒன்னும் பெரிய

பிரமாதம் கிடையாது !


" " வுக்கு " " போடு !

" " வுக்கு " " போடு !

" " வுக்கு " " போட்டா

ஓஹோன்னு இருக்கும் !


அது மாதிரியே

மைக்கு மை !

பைக்கு பை !


என்ன புரியலையா ?


அன்பேன்னு ஆரம்பிக்கறியா

அடுத்ததா ஆட்டுக்குட்டியேன்னு

அடிச்சுவிடு !


அம்மான்னு தொடங்கினா

சும்மான்னு முடி !


மகிழ்ச்சின்னா

நெகிழ்ச்சி , முகிழ்ச்சி .......

இடையில இகழ்ச்சியக்கூட

இழுத்து வுட்டுக்கலாம் !


"வாடா மச்சி " க்கு

இருக்கவே இருக்கு

"வாழக்கா பச்சி " !


காதல்ன்னா ,

கனவு , கற்பனை ,

கன்றாவி , கசுமாலம் ........

கடைசியா

மோதலையும் , சாதலையும்

மறந்துடாத மவனே !


பொம்பளையப் பாடுறியா

மரஞ்செடி கொடியில ஆரம்பிச்சு

மாங்கா , தேங்கா வரைக்கும் சும்மா

தோரணம் கட்டித் தொங்கவிடலாம் !

நடு நடுவுல மானே , தேனே

பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் !


ஊருக்கு உபதேசம் பண்ணறியா

வாலிபான்னு ஆரம்பிச்சா

வகை வகையா

வரிஞ்சு தள்ளலாம் !


உதாரணத்துக்கு ஒன்னு !

" வாலிபா கேள் !

சிப்பிக்குள் முத்து - அது

சிறைப்பட்ட சொத்து !

ஈரஞ்சு பத்து - நீ

வெற்றியோட வித்து ! "


யாருகிட்ட !


ஒரு வரியில சொல்லறத

ஒம்போது வரியில சொன்னா

அதுதாண்டா கவித !


இப்ப

" எனக்கு ரெண்டு நாளா பின்னாடி புடுங்கிகிச்சு " ன்னா

அது செய்தி !

அதையே

" எனக்கு

ரெண்டு நாளா

பின்னாடி

புடுங்கிகிச்சு ! " ன்னா

அது கவிதை !


அப்பப்ப ஆச்சர்யக்குறி

போட்டுக்க

அசத்தலா தெரியும் !


சினிமாவுலயும்

சின்னதா கவனம் வச்சுக்க

பழைய பாட்டோ

புதிய பாட்டோ

உருவி உள்ளவிட்டா

எவனும் ஏன்னு கேக்க மாட்டான் !


ஒன்னு தெரியுமா ?

தமிழ் ரொம்ப

நல்லமொழி !

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் !


சரக்கு தீந்துடுச்சுன்னு

நெனைக்கிறப்ப எல்லாம்

சரக்கடி !


எங்கே

பட்டயப் போட்டுக்கிட்டு சும்மா

பட்டயக் கெளப்பு பாக்கலாம் !!!





Comments

  1. en kanna thiranthitinga thalaiva ..... enimel nanum oru kavingyan than

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...