Skip to main content
தள்ளுவண்டிக்கடைக்காரன்





அவனுக்கு
என்
பேர் தெரியாது
ஊர் தெரியாது
ஆனாலும்
அவனுக்கு என்னை
அடையாளம் தெரியும் !

===========================================

அந்த
அழுக்கு நோட்டை
அவனுக்குத் தர
மனமில்லை !

===========================================

தரம்
அதிகமில்லை !
சுவை
அதிகமில்லை !
ஆனாலும்
அந்த உணவு
எங்களுக்குப் பிடித்திருக்கிறது !

===========================================

ஏழு மணிக்கெல்லாம்
கடை திறக்கிறான் !
எப்போது
கண் விழித்திருப்பான் ?

===========================================

அவன் கடை
எங்களின்
' அம்மா உணவகம் ' !

===========================================

சில நேரங்களில்
சில்லறைகளுக்கு பதில்
புன்னகைகள் !

===========================================

தொடர்ந்தாற்போல்
ஒரு வாரம்
விடுமுறை !
ஒரு வார்த்தை
அவனிடமும்
சொல்லிவிட்டு
வந்திருக்கலாம் !

===========================================

கடன் சொல்பவர்கள்
பிச்சைக்காரர்கள்
மற்றும்
போலீஸ்காரர்கள் என
அவனுக்கு
மூன்று எதிரிகள் !

===========================================

அந்தக்கடையால்
எங்கள் பிழைப்பும்
ஓடுகிறது !

===========================================

மழையே !
அவன்
வீடு சென்றபிறகு
வாயேன் !

===========================================

மாதக்கடைசியில்
நாங்கள் கொடுப்பதை
அவன்
எண்ணிப்பார்ப்பதில்லை !

===========================================

எனக்கும்
அவனுக்குமான
உலகத்தில்
கிழிந்த நோட்டுக்கள்
செல்லுகின்றன !

===========================================

கடையைச்
சாத்தும் முன்
அவன்
எண்ணிப்பார்த்து
வைத்த பணத்தில்
கொஞ்சம் ஈரம்
ஒட்டியிருக்கிறது !

===========================================

காசு வாங்குவதைக்
கழித்து விட்டுப்
பார்த்தால்
அவனும் ஒரு
அம்மா !



 



Comments

  1. கடைசி வரிகள் கலக்கல்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது