கடைசிமழை
அந்தக்கடைசி மழையை,
யாராவது
திட்டியிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
சிலர்
நனைந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
சிலர்
நனையத் தவறியிருக்கலாம் !
அந்தக்கடைசில் மழையில்,
ஒரு புணர்வு
நடந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
ஒரு கப்பல்
விடப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
யாராவது
செத்துப் போயிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு கவிதை
எழுதப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு பிரசவம்
நிகழ்ந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
ஒரு காதல்
மலர்ந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு குடை
தொலைந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு குரல்
அடங்கிப் போயிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு திரைப்படம்
ரசிக்கப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
ஒரு தேநீர்
சுவைக்கப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழை
இந்த உலகத்தின்
கடைசி மழையாகவும்
இருக்கலாம் !
சொல்ல முடியாது !
அந்தக்கடைசி மழையை,
யாராவது
திட்டியிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
சிலர்
நனைந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
சிலர்
நனையத் தவறியிருக்கலாம் !
அந்தக்கடைசில் மழையில்,
ஒரு புணர்வு
நடந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
ஒரு கப்பல்
விடப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
யாராவது
செத்துப் போயிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு கவிதை
எழுதப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு பிரசவம்
நிகழ்ந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
ஒரு காதல்
மலர்ந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு குடை
தொலைந்திருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு குரல்
அடங்கிப் போயிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்
ஒரு திரைப்படம்
ரசிக்கப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழையில்,
ஒரு தேநீர்
சுவைக்கப்பட்டிருக்கலாம் !
அந்தக்கடைசி மழை
இந்த உலகத்தின்
கடைசி மழையாகவும்
இருக்கலாம் !
சொல்ல முடியாது !
Comments
Post a Comment