Skip to main content
பிழைப்பு 




அலாரம்
அடித்தது !

திடுக்கிட்டெழுந்தேன் !

சமையலறையில்
அம்மா !

உறக்கத்தில்
அப்பா !

ஏழுமணிக்கு
எக்ஸ்பிரஸ் !

இரவல் வாங்கிய
இரவுப்பணி, 
இன்றைக்கு மட்டும் !

கொதித்த
வெந்நீர்
அளவாயச்சுட்டது !

எனக்குப்பிடித்த
எழுமிச்சம்பழ சாதம்
மணத்தது,
மதியத்திற்கு !

இரண்டு
இட்டிலிக்கு மேல்
இறங்கவில்லை !

அம்மா கொடுத்த
தேநீரில்
கூடுதலாக
சீனி !

அப்பாவை
எழுப்ப வேண்டாம்
என்றுவிட்டேன் !


 என்
அடுத்த வருகை
அநேகமாக
தீபாவளிக்கு !

காசு ஏதும்
வேண்டுமா என்றாள்
அம்மா !
இருக்கிறது
என்றேன் !

பேருந்துநிறுத்தம்
வரை
பயணப்பையைப்
பிடிவாதமாய்
வாங்கிக்கொண்டு
கூடவே வந்தாள் !

கோயமுத்தூரில்
இருந்து
ஜாதகம் வந்துள்ளதாம் !
பார்க்கவேண்டுமாம் !

கேட்டுக்கொண்டேன் !

அடுத்தமுறை
வரும்போது
கூடுதலாக 
விடுப்பு எடுத்து
வருபடி கூறினாள் !

சரியென்றேன் !

பேருந்து வந்தது !

விடைபெற்றுக்கொண்டேன் !

பேருந்துக்குள்
எனக்கொரு இருக்கை
உறுதியானதை
உறுதிசெய்த
அம்மாவின் முகத்தில்
சின்னதாய்த் திருப்தி !

ரயிலேறியதும்
போன் வரும் !

Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது