தள்ளுவண்டிக்கடைக்காரன்
அவனுக்கு
என்
பேர் தெரியாது
ஊர் தெரியாது
ஆனாலும்
அவனுக்கு என்னை
அடையாளம் தெரியும் !
===========================================
அந்த
அழுக்கு நோட்டை
அவனுக்குத் தர
மனமில்லை !

தரம்
அதிகமில்லை !
சுவை
அதிகமில்லை !
ஆனாலும்
அந்த உணவு
எங்களுக்குப் பிடித்திருக்கிறது !

ஏழு மணிக்கெல்லாம்
கடை திறக்கிறான் !
எப்போது
கண் விழித்திருப்பான் ?

அவன் கடை
எங்களின்
' அம்மா உணவகம் ' !

சில நேரங்களில்
சில்லறைகளுக்கு பதில்
புன்னகைகள் !

தொடர்ந்தாற்போல்
ஒரு வாரம்
விடுமுறை !
ஒரு வார்த்தை
அவனிடமும்
சொல்லிவிட்டு
வந்திருக்கலாம் !

கடன் சொல்பவர்கள்
பிச்சைக்காரர்கள்
மற்றும்
போலீஸ்காரர்கள் என
அவனுக்கு
மூன்று எதிரிகள் !

அந்தக்கடையால்
எங்கள் பிழைப்பும்
ஓடுகிறது !

மழையே !
அவன்
வீடு சென்றபிறகு
வாயேன் !

மாதக்கடைசியில்
நாங்கள் கொடுப்பதை
அவன்
எண்ணிப்பார்ப்பதில்லை !

எனக்கும்
அவனுக்குமான
உலகத்தில்
கிழிந்த நோட்டுக்கள்
செல்லுகின்றன !

கடையைச்
சாத்தும் முன்
அவன்
எண்ணிப்பார்த்து
வைத்த பணத்தில்
கொஞ்சம் ஈரம்
ஒட்டியிருக்கிறது !

காசு வாங்குவதைக்
கழித்து விட்டுப்
பார்த்தால்
அவனும் ஒரு
அம்மா !

கடைசி வரிகள் கலக்கல்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !
ReplyDelete