அன்பார்ந்த
வாக்காளப் பெருமக்களே !
உலகிலேயே
எளிய சின்னம்
எங்கள் சின்னம் !
யாருக்குமே
தெரியாத சின்னம்
எங்கள் சின்னம் !
போஸ்டரே
அடிக்காத சின்னம்
எங்கள் சின்னம் !
யாரையுமே
திட்டாத சின்னம்
எங்கள் சின்னம் !
யாருமே
திட்டாத சின்னம்
எங்கள் சின்னம் !
தேர்தல் அறிக்கையே
இல்லாத சின்னம்
எங்கள் சின்னம் !
இளைஞர்களே !
எங்கள்
சின்னத்திற்கு
ஓட்டுப் போட்டால்
உங்களுக்கு ஒரு
பிகர் கிடைப்பாள் !
கேயாஸ் தியரிப்படி
அது சாத்தியமாகும் !
குடும்பத்தலைவர்களே !
எங்கள் சின்னத்திற்கு
ஓட்டுப் போட்டால்
கடனில் இருந்து
விடுபடுவீர்கள் !
உங்கள் சார்பாக
நாங்கள்
சத்ரு சம்ஹார யாகத்தில்
கலந்து கொண்ட கையோடு
அப்படியே வருகிறோம் !
வாக்காளப் பெருமக்களே !
போக்குவரத்து இடையூறு
ஏற்படுத்தாத சின்னம்
எங்கள் சின்னம் !
கையூட்டு வழங்காத
சின்னம்
எங்கள் சின்னம் !
பிரியாணி தராமல்
உங்களுக்கு
வயிற்று வலியிலிருந்து
விடுதலையளித்த சின்னம்
எங்கள் சின்னம் !
குவாட்டர் தராமல்
உங்களுக்கு
தலை வலியிலிருந்து
விடுதலையளித்த சின்னம்
எங்கள் சின்னம் !
நீங்கள்
கழிவறையில்
இருக்கும்போது
உங்கள் கதவைத்தட்டி
ஓட்டுக் கேட்காத சின்னம்
எங்கள் சின்னம் !
வாக்குப்பதிவு
இயந்திரத்தில்
கடைசியில்
வீற்றிருக்கும் சின்னம்
எங்கள் சின்னம் !
ஆகவே,
நீங்கள்
வாக்களிக்க
உங்கள் கைகளை உயர்த்தி
கலோரிகளைச்
செலவழிக்க வேண்டியதில்லை !
போனவுடன்
கடைசியில்
டபக் என்று
போட்டு விடலாம் !
வாக்காளப் பெருமக்களே !
உங்களை
மூளைச்சலவை
செய்யாத சின்னம்
எங்கள் சின்னம் !
உலகிலேயே
நல்ல சின்னம்
எங்கள் சின்னம் !
உள்ளொன்று
வைத்துப்
புறமொன்று
பேசாத சின்னம்
எங்கள் சின்னம் !
கூட்டணிக் குழப்பம்
இல்லாத சின்னம்
எங்கள் சின்னம் !
புள்ளிவிபரங்களை
அள்ளிவீசாத சின்னம்
எங்கள் சின்னம் !
குட்டிக்கதைகள்
சொல்லாத சின்னம்
எங்கள் சின்னம் !
வாக்காளப் பெருமக்களே !
நாங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டால்
எதுவுமே
செய்யப் போவதில்லை !
ஆகவே,
நீங்கள்
நிம்மதியாக இருக்கலாம் !
Comments
Post a Comment