ஒரு நாளில் ஒரு பகலில் ................ ( சிறுகதை )
வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. சட சட வென்று சோ எனப் பெய்யும் மழை ! இம்மாதிரி மழை, பெய்யும் வரை
பெய்து விட்டு அரை மணியில் விட்டுவிடும். அரை
நாள் விடுப்பு எடுக்கலாமா என யோசித்தேன். தலை போகும் அளவு இப்போதைக்கு இங்கொன்றும் அவசரமில்லை, பெரிய தலையே விடுப்பில் இருக்கிறது.
சின்னத்தலையை எளிதாக சமாளித்துவிடலாம். பிட்டைப்
போட்டுப் பார்ப்போம் என்று
முடிவெடுத்து தொலைபேசியில் எண்களை ஒத்தினேன். அப்புறம், பெரியதலை என்பவர் சீனியர் மேனேஜர், சிறிய தலை என்பவர் மேனேஜர் ................. எங்கள் மேனேஜர்
கொஞ்சம் ஷோக்குப் பேர்வழி ! அவரிடம்
பர்மிஷன் கேட்பது மிக எளிது. ரிங் போய்க்கொண்டிருந்தது.சட்டென்று "
சொல்லுங்க ரங்கராஜ் " என்ற குரல் ! மனுஷன் இப்படி ' ங்க ' போட்டுப் பேசினால் நல்ல மூடில்
இருக்கிறாரென்று அர்த்தம்.
" சார் ..... ஒரு ஆப் டே பர்மிஷன் வேணும் ! வீட்ல முக்கியமான
கெஸ்ட் வராங்க
............" என்று இழுத்தேன். " ஷிப்ட்ல யார் இருக்காங்க மேன் ? " என்றார். " குமார், இருக்கார் சார் .........மெட்டீரியல்ஸ் பெண்டிங் ஒண்ணும் இல்லை... " என்றேன். " சரி ...... மழை
வேற பெய்யுதே எப்படி போவிங்க ? " என்றார். "
ஜெர்கின் இருக்கு சார் ..... இந்த மழை
இன்னும் இருபது நிமிஷத்துல விட்டுரும். நான் போய்டுவேன் சார் " என்றேன்.
" சரி .... போங்க ! அந்த RCA ஒண்ணு பெண்டிங் இருக்கு ...ஞாபகம் இருக்கில்ல ? "
" இருக்கு சார் ..... பாதி கம்ப்ளீட் ஆயாச்சு ...... நாளைக்கு காலைல உங்களுக்கு முடிஞ்சவரைக்கும் மெயில் பண்றேன் "
" ம்ம்ம் .... போயிட்டுவாங்க ......அப்புறம் யாரு அந்த கெஸ்ட் ? "
" எங்க மாமியா மாமனார் சார் "
" அப்ப உடனே போங்க "
அப்பாடா மனுஷன் பர்மிஷன் கொடுத்துவிட்டார் ! எப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. மாமியாளும் வரவில்லை சேமியாளும் வரவில்லை. எனக்கு இந்த மழைவேளையில் பவித்ரா கையால் பஜ்ஜி சாப்பிட வேண்டும் ! பஜ்ஜி சாப்பிட்டு ரொம்ப நாளாயிற்று ! போகும் போதே ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் வாழைக்காய் வாங்கிக் கொள்ள வேண்டும். நான் நினைத்த படியே மழை அரை மணியில் விட்டு விட்டது. குமாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். சொல்ல மறந்து விட்டேனே, பவித்ரா, பவித்திரமான என் மனைவி ! திருமணமாகி இந்த ஏழு வருடங்களில் அவள் எனக்கு அலுக்கவே இல்லை. ஒரு தனியார் பள்ளியில் வாத்தியாரிணி உத்தியோகம் பார்க்கிறாள். பாந்தம் ! சாந்தம் ! காந்தம் ! ஐ லவ் யூ பவி !
" சரி .... போங்க ! அந்த RCA ஒண்ணு பெண்டிங் இருக்கு ...ஞாபகம் இருக்கில்ல ? "
" இருக்கு சார் ..... பாதி கம்ப்ளீட் ஆயாச்சு ...... நாளைக்கு காலைல உங்களுக்கு முடிஞ்சவரைக்கும் மெயில் பண்றேன் "
" ம்ம்ம் .... போயிட்டுவாங்க ......அப்புறம் யாரு அந்த கெஸ்ட் ? "
" எங்க மாமியா மாமனார் சார் "
" அப்ப உடனே போங்க "
அப்பாடா மனுஷன் பர்மிஷன் கொடுத்துவிட்டார் ! எப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. மாமியாளும் வரவில்லை சேமியாளும் வரவில்லை. எனக்கு இந்த மழைவேளையில் பவித்ரா கையால் பஜ்ஜி சாப்பிட வேண்டும் ! பஜ்ஜி சாப்பிட்டு ரொம்ப நாளாயிற்று ! போகும் போதே ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் வாழைக்காய் வாங்கிக் கொள்ள வேண்டும். நான் நினைத்த படியே மழை அரை மணியில் விட்டு விட்டது. குமாரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். சொல்ல மறந்து விட்டேனே, பவித்ரா, பவித்திரமான என் மனைவி ! திருமணமாகி இந்த ஏழு வருடங்களில் அவள் எனக்கு அலுக்கவே இல்லை. ஒரு தனியார் பள்ளியில் வாத்தியாரிணி உத்தியோகம் பார்க்கிறாள். பாந்தம் ! சாந்தம் ! காந்தம் ! ஐ லவ் யூ பவி !
எங்களுக்கு ஒரே செல்ல மகள் ! அப்படியே பவித்ராவை உரித்துக் கொண்டு,.....யு.கே.ஜி படிக்கிறாள். இந்நேரம் ஸ்கூல் விட்டு வந்திருக்கமாட்டாள். பவித்ராவுக்கு
டெர்ம்ஸ் ஹாலிடே ! வீட்டில் தான் இருப்பாள். நான்
வருவதை, அலைபேசியில்
சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்தேன்.
வேண்டாம் ஒரு சஸ்பென்சாக இருக்கட்டுமே ! ரிலையன்சில் வாழைக்காய் வாங்கி விட்டு நான் என் இல்லத்தை அடைந்த போது, கதவு சாத்தியிருந்தது. வாசலில் ஒரு புது ஜோடி செருப்பு ! அது ஒரு ஆணுடையது !
அந்த செருப்பு அணிபவன் அநேகமாக இளைஞனாகத்தான்
இருக்க வேண்டும் ! யார் ? அவளது
கல்லூரித்தோழனோ ? கதவை ஏன் சாத்த வேண்டும் ? கதவைத் தட்டலாமா
என யோசித்தேன்...... கதவை ஏன் சாத்தி
வைத்திருக்கிறாள் ? கதவில் மழையின்
ஈரம் படிந்திருந்தது. சட்டென்று அவ்விடத்தில் நான்
அந்நியனாக உணர்ந்தேன். ஏன் வீடு ,
என் மனைவி , ...........ஆனால் உள்ளே
இருப்பவன் எனக்கு மட்டும் அந்நியனாக இருக்கும் பட்சத்தில், அந்த சூழலுக்கு நானும் ஒரு அந்நியனாகி
விடுகிறேனே !
மழை வேறு சவசவ என்று இன்னும் தூறிக்கொண்டிருந்தது.
ச்சை ! கதவை ஏன் சாத்த வேண்டும் ?
நான் கதவைத் தட்டும் எண்ணத்தைக்
கை விட்டேன்.
அப்படி கதவை சாத்திக் கொண்டு உள்ளே என்ன செய்கிறாள் ? ஒருவேளை .................. சட்டென்று என் புலன்கள் விழித்துக் கொண்டன ? இரத்தம் உடம்பெங்கும் தாறுமாறாகப் பாய்ந்தது. இல்லை ...பவித்ரா அப்படிப்பட்டவள் இல்லை ....என்ன நினைக்கிறேன் நான் ? என் புத்தி ஏன் இப்படிப் போகிறது ? என்ன இருந்தாலும் கதவைத் தட்டும் துணிவு வரவில்லை. வாழைக்காயை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு, தெருவில் நடந்தேன். சற்று காலந்தாழ்த்தி வந்து பார்க்கலாம் ! இலக்கில்லாமல் நடந்தேன்,...படபடவென்று வந்தது. அவசரமாக சிறுநீர் வேறு கழிக்க வேண்டும் ! சுற்றிலும் பார்த்தேன். ஒரு டாஸ்மார்க் கடையின் சந்தில் ஒரு கருவேல முள் செடி மண்டியிருக்க அவ்விடம் நோக்கிச் சென்றேன். சகதியாக இருந்தது. தரை என்று ஒரு இடத்தில் காலை வைத்ததில் பொதுக் என்று உள்ளே சென்றது ! ச்சை ச்சை ச்சை ! சகதியில் காலை விட்டுவிட்டேன் ! காலை எடுத்ததில் கொழகொழவென்று சேர் காலோடு வந்தது ! அப்படியே எட்டி எட்டி முள் புதரை நெருங்கி சிறுநீர் கழித்தேன். அப்பாடா ! ஓரளவு நிம்மதியாய் இருந்தது. வ்வ்வ்வவ்வ் வ் வ் வ் ! என்று ஒரு சத்தம் ! விசுக் என்று திரும்பினேன். என் பின்னே ஒரு சொறிநாய் தன் கூரான பல்லைக் காட்டிக் கொண்டு என் மீது பாயத் தயாராக இருந்தது.
அப்படி கதவை சாத்திக் கொண்டு உள்ளே என்ன செய்கிறாள் ? ஒருவேளை .................. சட்டென்று என் புலன்கள் விழித்துக் கொண்டன ? இரத்தம் உடம்பெங்கும் தாறுமாறாகப் பாய்ந்தது. இல்லை ...பவித்ரா அப்படிப்பட்டவள் இல்லை ....என்ன நினைக்கிறேன் நான் ? என் புத்தி ஏன் இப்படிப் போகிறது ? என்ன இருந்தாலும் கதவைத் தட்டும் துணிவு வரவில்லை. வாழைக்காயை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு, தெருவில் நடந்தேன். சற்று காலந்தாழ்த்தி வந்து பார்க்கலாம் ! இலக்கில்லாமல் நடந்தேன்,...படபடவென்று வந்தது. அவசரமாக சிறுநீர் வேறு கழிக்க வேண்டும் ! சுற்றிலும் பார்த்தேன். ஒரு டாஸ்மார்க் கடையின் சந்தில் ஒரு கருவேல முள் செடி மண்டியிருக்க அவ்விடம் நோக்கிச் சென்றேன். சகதியாக இருந்தது. தரை என்று ஒரு இடத்தில் காலை வைத்ததில் பொதுக் என்று உள்ளே சென்றது ! ச்சை ச்சை ச்சை ! சகதியில் காலை விட்டுவிட்டேன் ! காலை எடுத்ததில் கொழகொழவென்று சேர் காலோடு வந்தது ! அப்படியே எட்டி எட்டி முள் புதரை நெருங்கி சிறுநீர் கழித்தேன். அப்பாடா ! ஓரளவு நிம்மதியாய் இருந்தது. வ்வ்வ்வவ்வ் வ் வ் வ் ! என்று ஒரு சத்தம் ! விசுக் என்று திரும்பினேன். என் பின்னே ஒரு சொறிநாய் தன் கூரான பல்லைக் காட்டிக் கொண்டு என் மீது பாயத் தயாராக இருந்தது.
இதயம் தொண்டைக்கே வந்து விட்டது ! உடம்பெல்லாம் வெலவெலத்துப் போக, நான் அனிச்சையாக " பைரவா.....பைரவா
..." என்று முணுமுணுத்தேன்.
வெகு திடீரென்று அவ்விடத்தில் ஒரு பெட்டை நாய் ஒன்று எங்கிருந்தோ ஓடிவர, என்னை முறைத்துக் கொண்டிருந்த அந்த
சொறிநாய், தன் கவனத்தை
அப்பெட்டையின் மீது திருப்ப, கிடைத்த கேப்பில் நான் அவ்விடம் விட்டு அகன்றேன். காலில்
இன்னும் சேறு இருந்தது. உதறினேன். என்னைக் கடந்த
எவனோ ஒரு பாமரன் மேலும் மீழும் பார்த்து விட்டுச் சென்றான். மணி பார்த்தேன். சரியாக பதினைந்து
நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன. மீண்டும்
வீட்டிற்குச் சென்று பார்க்கலாம். அந்த முகம் தெரியாதவன் போயிருந்தாலும் போயிருப்பான். எனக்கு பவித்ராவின் மீது இப்போது கோபம் வந்தது. வீடு நோக்கி நடந்தேன். வீட்டை நெருங்க நெருங்க திக் திக் திக் !
வீட்டை நான் அடைந்த போது, அந்த செருப்பு அங்கேயேதான் இருந்தது. ஜன்னல் திட்டில் நான் வைத்த கவர், அப்படியேதான் இருந்தது. கதவு சாத்தியே இருந்தது. எதுவும் மாறவில்லை. மழையின் தூறல் முன்னைக்கு இப்போது சற்று வலுத்திருந்தது. சோ என்ற மழை பெய்யும் வரை பெய்து விட்டு, விட்டுவிடும் என்று தப்புக் கணக்கு ! நான் போய்விட்டு வருவதற்குள் இந்த செருப்புமனிதன் போயிருப்பான் என்று தப்புக்கணக்கு ! இந்த அரை நாள் பர்மிஷன் எனக்கு இன்பமாய் இருக்கும் என்று தப்புக்கணக்கு ! என் மனைவி பவித்ரா நல்லவள் என்று தப்புக்........! வேண்டாம் ...நினைக்காதே ! நினைக்காதே ! ஆனாலும் அவள் மீது கோபம் இருந்தது.
எப்போதோ பிளாட்பாரத்தில் பதினைந்து ரூபாய்க்கு வாங்கிப் படித்த சரோஜாதேவி புத்தகக்கதைகள் வேறு அநியாயத்துக்கு ஞாபகத்துக்கு வந்து வயிற்றைக் கலக்கின. கைபிசைந்து நின்றேன். மழை வேறு இன்னும் வலுக்க.......தெப்பமாக நனைத்து விட்டேன். வேறு வழியில்லை ! சுற்றிலும் பார்த்தேன் ! வீட்டை ஒட்டி மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டு இருந்தது. மொட்டை மாடியில் இருந்து வீட்டுக்குள் செல்லவும் படிக்கட்டு இருக்கும். அங்கே இருக்கும் கதவு பெரும்பாலும் பூட்டி இருக்கும். ஆனால் அந்தக் கதவை ஒட்டி இருக்கும், ஸ்டோர் ரூமின் கதவு பெரும்பாலும் பூட்டப்படுவதில்லை ! வெளிப்புறத் தாழ்பாள் தான். நான் தடதடவென படி ஏறினேன். வாழைக்காய் கவரை எடுத்துக் கொண்டேன். மொட்டை மாடிக்கு வந்தேன். வேகமாய் எட்டு வைத்து நடந்ததில், எங்கோ பாசி இருந்திருக்கும் போல. பிசகி விட்டது. ச்சொட்டீர் என விழுந்தேன். மழை என் மீது கொட்டிக் கொண்டிருந்தது. வாழைக்காய் கீழே விழுந்து விட்டிருந்தது. நான் வெறி கொண்டு எழுந்தேன். அந்த வாழைக்காயை விசிறி எறிந்தேன். அது என் வீட்டு கொல்லையில் போய் சொத் என சேற்றில் விழுந்தது.
நான் படிக்கட்டில் இறங்கினேன். ஸ்டோர் ரூமை நெருங்கினேன். நல்லவேளை பூட்டபபவில்லை. ஓசையெழுப்பாமல் தாழ்ப்பாளைத் திருகி திருகித் திறந்தேன். உள்ளே நுழைந்தேன். நிறைய தட்டு முட்டு சாமான்கள் ! அடி மேல் அடி வைத்து அந்த அறையின் ஜன்னல் அருகே சென்றேன். மெல்ல மெல்ல அதைத் திறந்தேன். ஒரு கோடளவு வெளிச்சம் வந்தது. இதயத்துடிப்பு காதில் கேட்டது. உள்ளே பார்த்தேன். ஹால் ! தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. பவித்ரா சமையல் அறைக்குள்ளிருந்து வருகிறாள். இன்றைக்கென்று கொள்ளை அழகாக இருக்கிறாள் ! நைலக்ஸ் சில்க் புடவை ! லூஸ் ஹேர் ! என் பொண்டாட்டியை நான் வெறிக்க வெறிக்கப் பார்த்து ரசித்தேன். ஆனால் ............. எங்கே அவன் ? எங்கே அவன் ?
பார்வையைச் சுழற்றினேன். ஒருத்தனையும் காணோம் ! பவித்ரா, அன்றைய தினசரியை எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்க்க ஆரம்பிக்கிறாள். அவன், ஒருவேளை உள்ளே தூங்குகிறானோ ? பார்ப்போமே ! கிட்டத்தட்ட கால்மணிநேரம் நின்றுவிட்டேன். ஒன்றும் நிகழவில்லை. மூச்சு முட்டுவது போல இருந்தது. ஜன்னலை இன்னும் கொஞ்சம் திறந்தேன். பவித்ரா இன்னும் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அது நிகழ்ந்தது ! சொத் என எனது இடது தோள்பட்டையில் ஏதோ ஒன்று விழுந்தது. ஆஆஆ ! பல்லியா ? பாப்பராண்டியா ? தேளா ? பாம்பா ? பூரானா ? மைக்ரோசெகண்டில் எனது மூளை அத்தனை சாத்தியங்களையும் அலசி, அதன் விளைவுகளையும் உத்தேசித்து, " ப்ப்பப்ப்பேபேபேபே ஏஏஏ ஏ ......ஏ ..... " எனக்கத்தி, மின்சாரம் பாய்ந்தவன் போல உடம்பை ஒரு உதறு உதறி, தட்டு முட்டு சாமானங்களைஎல்லாம் உருட்டிக் கீழே தள்ளி................. எதுவோ ஒன்று என்னில் இருந்து கீழே
குதித்து ஓட, அது ஒரு பல்லி .........பல்ல்லி .............ல்ல்ல்ல்லி ..........லி ..........லி ...........லி .......... ! இதற்குள் பவித்ரா ஜன்னல் வழியே என்னைப் பார்த்து விட்டு வ்வ்வீல் எனக் கத்திவிட்டாள் ! நான், " ஸ்சூ ....ஸ்சூ...........ஸ்சூ............நான்தான் .....நான்தான் .........கதவைத் திற ....திற ....ற ! " என்றேன். அவள், " இங்கே என்ன பண்ணித் தொலைக்கறீங்க......" என்றபடியே கதவைத் திறந்து என்னை, நான்தானா என்று நம்ப முடியாமல் பார்த்தாள்.
எனக்கு திக்கியது. நாக்குத் தள்ளியது. உளறினேன், " அ... அது வந்து பவித்ரா, வாசல்ல அது என்ன செருப்பு ? " என்றேன். " செருப்பா, என்ன செருப்பு ? மொதல்ல நீங்க இந்த ரூம்குள்ள எப்படி வந்தீங்க ? ஏன் இப்படி என்னைப்பார்த்து பொலபொலன்னு நடுங்கறீங்க ? என்ன பண்ணித்தொலைச்சீங்க ? " என்றாள். நான் அவள் கையைப் பற்றி எழுத்துக் கொண்டு போனேன், கதவைத் திறந்தேன், அந்த செருப்பைக் காண்பித்தேன். " இதோ அந்த செருப்பு ? யாருடையது ? " என்றேன் சற்றே மிரட்டும் தோரணையில். பவித்ரா நிதானமாக அந்த செருப்பைப் பார்த்தாள். " பர்மிஷன் போட்டு வந்தீங்களா ? " என்று கத்தி போலக் கூர்மையாகக் கேட்டாள். அந்த ஒரு கேள்வியிலேயே நடந்தது அத்தனையையும் அவள் கிரகித்து விட்டது போலத் தெரிந்தது. அதோடு, நான் பயப்படும்படியாக எதுவும் நிகழவில்லை என்பதும் புரிந்தது. " சோ.........வந்திருக்கீங்க .............செப்பல் பார்த்திருக்கீங்க ..........உள்ள டோர் லாக் பண்ணியிருந்தது ...........தட்டியிருக்கலாம் .........தட்டல ...........அப்புறம் ,,,,,,,,,,மொட்டை மாடிக்குப் போய்..........ஸ்டோர் ரூம் வந்து ..........ஜன்னல் வழியா .........திருட்டுத்தனமா ,,,,,,,,,நான் என்ன பண்றேன்னு ..............இதைச் சொல்லும் போது பவித்ராவின் கண்ணைக் கீறிக்கொண்டு வந்தது கண்ணீர் !
" ஏய் பவித்ரா இப்ப எதுக்கு அழறே ? என் நிலைமைல இருந்து யோசிச்சுப்பார் .........புதுசா செருப்பு இருந்திருக்கு .,..... கதவு லாக் பண்ணிருக்கு ....... தட்ட மனசுல தைரியம் இல்ல. அப்படியே மழைல நனைஞ்சுட்டுப் போய், எங்கியோ புதர்ல மூச்சா போய், அதை நாய் பார்த்து, வள்ள்ள்ள் னு கத்தி, நான் சேத்துல கால விட்டு, மறுபடியும் வந்து டோர் லாக் பண்ணியிருந்ததைப் பார்த்து, மொட்டை மாடிக்குப் போய்....அங்க வழுக்கி விழுந்து எந்திரிச்சு .....ஸ்டோர் ரூம் வந்து .........பல்லி விழுந்து பே னு கத்தி .............." நான் மூச்சு வாங்கினேன். அப்பாடா பவித்ராவின் இதழோரத்தில் மெல்லிய சிரிப்பு ! ஆனாலும் அந்த செருப்பு மனசுக்குள் ஓரமாய் உறுத்தியது ! அப்போது பக்கத்து வீட்டு ரோசி ஆண்ட்டி எங்களை நோக்கி வந்தாள். " எங்க டாமி பண்ற அலும்பு தாங்கல. செருப்பைக் கண்டா விடறது இல்ல. இதோ, அவர் செருப்பை இங்க கொண்டாந்து போட்டிருக்கான் ? நீங்க, கேட் லாக் பண்ணலையா ? ஸாரி, எங்க டாமியைக் கொஞ்சம் கண்டிச்சு வைக்கறேன் " என்றபடி செருப்பை எடுத்துக் கொண்டு போனாள். டாமி என்பது ரோசி வீட்டு நாய் !
" உள்ள வாங்க " என்று அழைத்தாள் பவித்ரா. நான், " ஸாரி ...ப்ளீளீளீளீஸ். " என்றேன். பவித்ரா அதைக் காதில் வாங்காமல், " தலையெல்லாம் ஈரம் ...." என்றபடி டவல் எடுத்து துவட்டி விட்டாள். " பவித்ரா என்னை மன்னிச்சுரு ...." என்றபோது என் கண்கள் கலங்கியிருந்தன. " ச்சு..... என்ன இது கொழந்தையாட்டம் கண்ணெல்லாம் கலங்கிட்டு ........ அந்த சந்தர்ப்பத்துல எல்லாரும் அப்படித்தான் நடந்துப்பாங்க ...... தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டீங்க பாருங்க ...... உங்க அந்த நல்ல மனசு ஒண்ணு போதும். புரியுதா ? எங்கே சிரிங்க பார்க்கலாம் ...... சிரிங்க .....சிரி ........சிரிடா ...." நான் திடுக்கிட்டு, " என்ன டா வா .....? " அவள், " அமாண்டா லூசுப்பையா " என்றபடி என்னைத் தன் மார்போடு கட்டிக்கொண்டாள். :" கொஞ்சம் இருங்க " என்றபடி உள்ளே சென்று ஹாட் பேக் மற்றும் ஒரு தட்டு எடுத்து வந்து, " இந்தாங்க வாழைக்காய் பஜ்ஜி ...... மழை வந்தா நீங்க கேட்பீங்கன்னு தெரியும்....அதான் பண்ணி வைச்சேன். " என்றாள்.
Comments
Post a Comment