என் பதில்கள்
என்னவென்று தெரிந்தும்
நீ
கேள்விகள்
கேட்டுக்கொண்டேயிருக்கிறாய் !
@@@@@@
ஒவ்வொரு முறையும்
நீ
கண்ணீர் சிந்தும் போது
எங்கேயோ ஒரு பூ
நிச்சயம் உதிர்கிறது !
@@@@@@
எப்படியெல்லாமோ
சமாதானம் செய்தும்
வராத உன் புன்னகை,
பிறகு நான்
மௌனமாகிவிடும் போது
மெல்ல மெல்ல
எட்டிப் பார்க்கிறது !
@@@@@@
நீ
அருகிலிருக்கும்
போதெல்லாம்
சத்தியமாய்
எனக்கு
பிற பெண்கள்
தெரிவதேயில்லை !
@@@@@@
இப்போதெல்லாம்
பிச்சைக்காரர்களுக்குக்
கொடுக்கவென்றே
சில்லறைகள்
சேகரிக்கிறேன் நான் !
@@@@@@
அதென்னமோ
தெரியவில்லை
உன்
கண்களை
பார்க்கும்போதெல்லாம்
எனக்கு
பேச்சு நின்றுவிடுகிறது !
@@@@@@
மழை பெய்கிறதே என்று
நாம்
இன்னும் கொஞ்சநேரம்
பேசிக்கொண்டிருந்தோம் !
பெய்வதை மறந்து விட்டு
நாம்
பேசுவதையே
பார்த்துக் கொண்டிருந்தது
சொட்டியபடி
அந்த மழை !
Comments
Post a Comment