வேலை காத்திருக்கிறது
அது
ஏதோ ஒரு காலை !
ஏனோ தானோவென
எழுகிறேன் !
ஆலை போவதென்றாலே
அழுகிறேன் !
கண்ணெல்லாம் எரிச்சல் !
மனமெல்லாம் புகைச்சல் !
பேசாமல் இப்படியே
படுத்துவிடலாமா ?
இருக்கும் விடுப்பை - இப்போதே
எடுத்துவிடலாமா ?
எத்தனை நாள் தான்
ஆலை செல்வது ?
எவ்வளவு தான்
வேலை செய்வது ?
கடுப்பு என்று சொல்லி
விடுப்பு நானெடுத்தால்
குடியா முழுகிவிடும் ?
தலையில் என்ன
இடியா விழுந்துவிடும் ?
அப்படியே என்றாலும்.
ஆனால் ஆகிறது !
போனால் போகிறது !
வந்தால் வருகிறது !
வராட்டிப் போகிறது !
கடைசியில்,
எல்லாமே ஒரு சாண்
வயிற்றுப்பாடு !
அந்தரத்தில் ஆடும்
கயிற்றுப்பாடு !
இன்னும் சற்றுநேரம்
இப்படியே கிடந்தால்
இவ்வுலகைத் துறந்து
ஞானி கீனி ஆகிவிடுவேன் !
சோம்பேறியாய் இருப்பதுதான்
ஞானி ஆவதற்கான
நியாயமான தகுதியோ ?
எதற்கு வம்பு
எழுந்து விட்டேன் !
குமுறிக்கொண்டே
குளியலறை சென்றேன் !
பசையைப் பிதுக்கினேன் !
பல்லை செதுக்கினேன் !
வாளியைப் பார்த்தேன்
காலியாய் இருந்தது !
ஊற்று வருமென்று
குழாயைத் திருகினேன் !
காற்று தான் வந்தது !
ஆகா .....
எங்கே இந்த நீர் ?
அறையில் உள்ளதோ
அரைபாட்டில் பீர் !
அதை வைத்து
வாயை ஓரளவு
கொப்பளிக்கலாம் !
மற்றதற்கு ?
ஐயகோ ...............
என்ன ஒரு நிலை ? - இது
எவன் செய்த பிழை ?
கலவரம் படிந்த முகத்தோடு
வெளியே வந்தேன்,
நிலவரம் தெரிந்து கொள்ள !
அங்கே,
என்னைப்போல் ஒருவன்கள் !
கைபிசைந்து
காத்திருந்தனர் !
அவனவன் அவசரம்
அவனவனுக்கு !
விசாரித்ததில்,
வழக்கமாக
மோட்டார் போடும்
வீட்டு ஓனர்,
இன்று கொஞ்சம்
அசந்து விட்டதில்
இக்காலைவேளை இப்படிக்
கசந்து விட்டதாம் !
மூவைந்து நிமிடங்களாவது
மூடிக்கொண்டு நிற்க வேண்டுமாம் !
ஒரே ஒருவனின்
தாமதம்,
இங்கு எத்தனை பேருக்கு
சங்கடம் !
அநாவசியமாய்
நான் எடுக்கும் விடுப்பில்
எத்தனை பேரின்
அவசியங்கள்
அர்த்தம் இழக்கப்போகின்றனவோ ?
சிந்தித்தேன் !
என்னை நானே
நிந்தித்தேன் !
சொர்ர்ரென்று ஓர் சத்தம்
விர்ர்ரென்று காதில் பாய,
" நீர் வந்து விட்டது !
நீர் வந்து விட்டது ! "
ஆவேசக் குரல்கள்
அடுக்கடுக்காய்க் கேட்க,
குளியலறை நோக்கி
கிட்டத்தட்ட ஓடினேன் !
ஆலை செல்ல வேண்டும் !
வேலை காத்திருக்கிறது !
எல்லாமே ஒரு சாண்
வயிற்றுப்பாடு !
அந்தரத்தில் ஆடும்
கயிற்றுப்பாடு !
இன்னும் சற்றுநேரம்
இப்படியே கிடந்தால்
இவ்வுலகைத் துறந்து
ஞானி கீனி ஆகிவிடுவேன் !
சோம்பேறியாய் இருப்பதுதான்
ஞானி ஆவதற்கான
நியாயமான தகுதியோ ?
எதற்கு வம்பு
எழுந்து விட்டேன் !
குமுறிக்கொண்டே
குளியலறை சென்றேன் !
பசையைப் பிதுக்கினேன் !
பல்லை செதுக்கினேன் !
வாளியைப் பார்த்தேன்
காலியாய் இருந்தது !
ஊற்று வருமென்று
குழாயைத் திருகினேன் !
காற்று தான் வந்தது !
ஆகா .....
எங்கே இந்த நீர் ?
அறையில் உள்ளதோ
அரைபாட்டில் பீர் !
அதை வைத்து
வாயை ஓரளவு
கொப்பளிக்கலாம் !
மற்றதற்கு ?
ஐயகோ ...............
என்ன ஒரு நிலை ? - இது
எவன் செய்த பிழை ?
கலவரம் படிந்த முகத்தோடு
வெளியே வந்தேன்,
நிலவரம் தெரிந்து கொள்ள !
அங்கே,
என்னைப்போல் ஒருவன்கள் !
கைபிசைந்து
காத்திருந்தனர் !
அவனவன் அவசரம்
அவனவனுக்கு !
விசாரித்ததில்,
வழக்கமாக
மோட்டார் போடும்
வீட்டு ஓனர்,
இன்று கொஞ்சம்
அசந்து விட்டதில்
இக்காலைவேளை இப்படிக்
கசந்து விட்டதாம் !
மூவைந்து நிமிடங்களாவது
மூடிக்கொண்டு நிற்க வேண்டுமாம் !
ஒரே ஒருவனின்
தாமதம்,
இங்கு எத்தனை பேருக்கு
சங்கடம் !
அநாவசியமாய்
நான் எடுக்கும் விடுப்பில்
எத்தனை பேரின்
அவசியங்கள்
அர்த்தம் இழக்கப்போகின்றனவோ ?
சிந்தித்தேன் !
என்னை நானே
நிந்தித்தேன் !
சொர்ர்ரென்று ஓர் சத்தம்
விர்ர்ரென்று காதில் பாய,
" நீர் வந்து விட்டது !
நீர் வந்து விட்டது ! "
ஆவேசக் குரல்கள்
அடுக்கடுக்காய்க் கேட்க,
குளியலறை நோக்கி
கிட்டத்தட்ட ஓடினேன் !
ஆலை செல்ல வேண்டும் !
வேலை காத்திருக்கிறது !
Comments
Post a Comment