பழைய காதலி
அவள்,
நிறம் மாறியிருந்தாள்
உரு மாறியிருந்தாள்,
ஆனாலும்
அந்தக் கண்கள்
காட்டிக்கொடுத்து விட்டன,
அவள்,
அவள் தானென்று !
ஆறுவயது
குழந்தையொன்று
அவளை
அம்மாவென்று
அழைத்தது !
ஒரு
சபிக்கப்பட்ட
நொடியில்,
எங்கள் பார்வைகள்
மீண்டுமொருமுறை
சந்தித்துக் கொண்டன !
அவள் கண்களில்
அந்தக் கடைசி ஈரம்
இன்னும் காயவில்லை !
அதிர்ச்சியை
வெளிக்காட்டாத
முதிர்ச்சியோடு
புன்னகைக்க முயன்றாள் !
குழந்தை
அவளைப் போலவேயிருந்தது !
அது
" அங்கிள் " என்றழைத்ததை
அநேகமாய்
அவள் ரசிக்கவில்லை !
நின்றபடி
நாகரிக இடைவெளியில்
நானும் அவளும்
நலம் விசாரித்தோம் !
முகம் பார்த்துப்
பேசாமல் - அவள்
நகம் பார்த்துப்
பேசினாள் !
நான்,
நிலம் பார்த்துப்
பேசினேன் !
சில வருடங்கள்
சில வார்த்தைகளில்
முடிந்து விட,
மௌனம் வந்து
இருவர் உதட்டிலும்
படிந்து விட .............
அதன் பிறகு
எங்கள்
உணர்வுகள் மட்டும்
ஊமையாய்
ஏதோ பேசிக்கொண்டிருந்தன !
இறுதியாக,
விடை பெற்றுவிட்டு
நடை பயிலும்போது
ஒருமுறை
திரும்பிப்பார்த்தாள் !
வெறுமனே
திரும்பிப் பார்த்தாளோ ?
வேண்டுமென்றே
விரும்பிப் பார்த்தாளோ ?
இனியெப்போதும்
அவளைப்
பார்க்கக் கூடாதென்று
நினைத்துக் கொண்டேன் !
காரணம்,
அவளிடம்
ஒரேயொரு
பொய் சொல்லியிருந்தேன் !
எனக்குத் திருமணம்
ஆகிவிட்டதென்று !!!
அவள்,
நிறம் மாறியிருந்தாள்
உரு மாறியிருந்தாள்,
ஆனாலும்
அந்தக் கண்கள்
காட்டிக்கொடுத்து விட்டன,
அவள்,
அவள் தானென்று !
ஆறுவயது
குழந்தையொன்று
அவளை
அம்மாவென்று
அழைத்தது !
ஒரு
சபிக்கப்பட்ட
நொடியில்,
எங்கள் பார்வைகள்
மீண்டுமொருமுறை
சந்தித்துக் கொண்டன !
அவள் கண்களில்
அந்தக் கடைசி ஈரம்
இன்னும் காயவில்லை !
அதிர்ச்சியை
வெளிக்காட்டாத
முதிர்ச்சியோடு
புன்னகைக்க முயன்றாள் !
குழந்தை
அவளைப் போலவேயிருந்தது !
அது
" அங்கிள் " என்றழைத்ததை
அநேகமாய்
அவள் ரசிக்கவில்லை !
நின்றபடி
நாகரிக இடைவெளியில்
நானும் அவளும்
நலம் விசாரித்தோம் !
முகம் பார்த்துப்
பேசாமல் - அவள்
நகம் பார்த்துப்
பேசினாள் !
நான்,
நிலம் பார்த்துப்
பேசினேன் !
சில வருடங்கள்
சில வார்த்தைகளில்
முடிந்து விட,
மௌனம் வந்து
இருவர் உதட்டிலும்
படிந்து விட .............
அதன் பிறகு
எங்கள்
உணர்வுகள் மட்டும்
ஊமையாய்
ஏதோ பேசிக்கொண்டிருந்தன !
இறுதியாக,
விடை பெற்றுவிட்டு
நடை பயிலும்போது
ஒருமுறை
திரும்பிப்பார்த்தாள் !
வெறுமனே
திரும்பிப் பார்த்தாளோ ?
வேண்டுமென்றே
விரும்பிப் பார்த்தாளோ ?
இனியெப்போதும்
அவளைப்
பார்க்கக் கூடாதென்று
நினைத்துக் கொண்டேன் !
காரணம்,
அவளிடம்
ஒரேயொரு
பொய் சொல்லியிருந்தேன் !
எனக்குத் திருமணம்
ஆகிவிட்டதென்று !!!
வார்த்தைகளில்
ReplyDeleteஉணர்த்த முடியாத
உணர்வுகளை
அழகாக வடித்து இருக்கிறீர்கள்
அருமை .........