Skip to main content
நாம் கணிணி




உலகையே
இயக்குபவர் போல்
நாம் அந்த
கணிப்பொறியின் முன்பு
அமர்ந்திருக்கிறோம் !

நம்
புருவமத்தியில்
சிந்தனை முடிச்சு !

கன்னக்கதுப்புகளில்
சிந்தனை இறுக்கம் !

தாடைகளில்
சிந்தனைகளின்
மெல்லிய அசைவு !

இப்படியாக .....

நம்
இன்னபிற க்களில்
சிந்தனையின்
இன்னபிற க்கள் !

உற்றுப்பார்த்தால்
நம் தலையைச்சுற்றி
ஒளிவட்டம்
தெரியலாம் !
ஒளிச்சதுரமாகவும்
அது இருக்கலாம் !

நாம்
ஜீவசமாதி
அடைந்திருக்கவில்லை
என்பதை
அவ்வப்போதான
நம் கனைப்பு
உறுதிப்படுத்திவிடுகிறது !

நாம் செய்வது
ஒரு வகையான
அறிதுயில் !

சிலபோது
நம் முகத்தில்
புன்னகை அரும்புகிறது !
அந்தப்புன்னகை

கடவுளின் புன்னகையை
ஏறத்தாழ
ஒத்திருக்கிறது ! 


அநேகமாக நாம்
மின்கட்டணம்
செலுத்திக்கொண்டிருக்கலாம் !

ஒரு
கிசுகிசுவைப்
படித்துக்கொண்டிருக்கலாம் !

வீடியோ கேம்
ஆடிக்கொண்டிருக்கலாம் !

ஆபாசப்படம்
பார்த்துக்கொண்டிருக்கலாம் !

திரையைப் பார்த்த
மேனிக்குத்
தூங்கிக்கொண்டிருக்கலாம் !

ஆனால்
அங்கேயிருந்து பார்த்தால்
நாம்
சாட்சாத்
புத்தர் தான் !
சிந்தனை வயப்பட்ட
கணிணி புத்தர் !

நமக்கு
எல்லாமே
கணிணியில் இருக்கிறது !
எல்லாமுமாக
கணிணியே இருக்கிறது !

தப்பில்லை !

கணிணி என்ற
ஜன்னல் வழியே
வேடிக்கை பார்க்கலாம்தான் !
ஆனால்
வீடு என்பது
வேடிக்கை பார்க்கமட்டும்
அல்லவே !!!









Comments

  1. வணக்கம்
    ஆனால்
    அங்கேயிருந்து பார்த்தால்
    நாம்
    சாட்சாத்
    புத்தர் தான் !
    சிந்தனை வயப்பட்ட
    கணிணி புத்தர் !
    கவிதை அருமையாக உள்ளது. ரசித்தேன்

    என்பக்கம் கவிதையாக
    எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா !

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது