Skip to main content
ஒரு விடைபெறுதல் 



தேநீர்
ஆறிக்கொண்டிருக்கிறது !

மேஜையில்
எதிரெதிராக
நீ !
நான் !

தேநீருடன் கூடிய
நம் கடைசிச்சந்திப்பு !

தலைகுனிந்தபடி
நீ !
உன்னையே பார்த்தபடி
நான் !

ஒருவகையில்
நம்
முதல் சந்திப்பிலும்
இப்படித்தானிருந்தோம் !

வேடிக்கைதான் !

இருவீட்டார்
சம்மதத்துடன்
நாம்
பிரியப்போகிறோம் !

சுற்றிலும்
ஆங்காங்கே
தேநீர் அருந்தும்
காதலர்களின்
ஆசிர்வாதத்தோடு
நாம்
பிரியப்போகிறோம் !

என்
இரண்டுவார தாடி
உனக்குப்பிடிக்காதுதான் !

நினைவிருக்கிறதா
இந்த

 நீல நிறச்சட்டை
நீ
வாங்கித்தந்தது !

என்
கை நகங்களில்
அழுக்குப் படிந்துள்ளது !

சற்று முன்னர்தான்
சிகெரெட் பிடித்தேன் !

என்னில்
எல்லாமே
இயற்கையாக
இருக்கின்றன
என்
புன்னகையைத்தவிர !

எனக்குப்பிடித்த
மஞ்சள் சுடிதாரில்
நீ வரவில்லை !

பவுடர்
சற்று அதிகம் !

கூந்தலில்
ரோஜா இல்லை !

நான்
வாங்கித்தந்த
பிளாஸ்டிக் வளையல்களை
உன்கைகள்
அணிந்திருக்கவில்லை !

உதட்டுச்சாயத்தைக்
கொஞ்சம்
குறைத்திருக்கலாம் !

உன்னில்
எல்லாமே
செயற்கையாக
இருக்கின்றன !
உன்
கண்களைத்தவிர !

அந்தக்கண்களில்
கண்ணீர் வரவேண்டாம் !
வரக்கூடாது !

பின்னே,
உன்னைப் புறக்கணிப்பதாய்
நான் அரங்கேற்றிய
நாடகங்கள்
வீணாய்ப்போவதா ?

உன்
தந்தைக்கு
மகிழ்ச்சிதானே !

உன்தாய்
இப்போது
அழுவதில்லையே !

உனக்கும்
ஒருவகையில்
நிம்மதி !

அந்த
அமெரிக்க மாப்பிள்ளையைக்
கேட்டதாகச் சொல் !

நல்ல வேலையை
நான் இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன் !

தங்கையின்
திருமணத்திற்கு
லோன் போடவேண்டும் !

இதோ !

நாம்
எடுத்துக்கொண்ட
புகைப்படங்கள் !

இவற்றை
உன் வீட்டில்
என்ன செய்வார்கள் ?

எரிப்பார்களா ?
புதைப்பார்களா ?

கடைசியாக,
கண்கள் உதிர்த்த
கண்ணீர்த்துளிகளை
நீ
கவனிக்கவில்லையென்ற
நம்பிக்கையுடன்
நான்
எழுந்து கொள்கிறேன் ?




Comments

  1. நல்லது நன்றி... you can visiit :http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
  2. எதிர்பார்க்காத கோணம்.வித்தியாசமான பார்வை..தெளிவான சிந்தனை.நன்று கவிதை

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்க்காத கோணத்தை எதிர்பாராமல் வந்து ரசித்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி தோழி

      Delete
  3. Replies
    1. //நாம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் !
      இவற்றை உன் வீட்டில் என்ன செய்வார்கள் ?
      எரிப்பார்களா ? புதைப்பார்களா ?//

      நாகரீகமானப் புரிதலுடன் கூடிய பிரிதல் .....

      மாறுபட்ட சிந்தனைகளுடன் நல்ல படைப்பு. பாராட்டுக்கள்.

      Delete
    2. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete
  4. கருத்திற்கு நன்றி நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது