மன்னிப்பு நானும் அவளும் ஓடி வந்துவிட்டோம் ! தனியொரு வாழ்க்கை தேடி வந்துவிட்டோம் ! அவளுக்கு நிச்சயம் ஆகியிருந்தது ! அட்டகாசமாக ஆகிவிட்டுப் போகட்டும் ! அதனால் என்ன ? பதிவு அலுவலக வாயிலில் ஓரமாய் வீற்றிருந்த ' கோயிலில் ' நண்பர்கள் சூழ்ந்து அன்பால் எங்களுக்கு வேலி கட்ட, நான் அவளுக்குத் தாலி கட்டினேன் ! எதிர்காலம் நினைத்து அவள் வருந்த, ஆறுதல் வார்த்தைகளால் நான் அவளுக்கு மருந்த, அப்புறம், நல்லதொரு உணவகத்தில் நண்பர்கட்கு நாங்கள் விருந்த, அவர்களும் மகிழ்வோடு அருந்த........... இருமனம் இணைந்து விட்டது ! திருமணம் முடிந்து விட்டது ! மாலை வந்தது ! மாலைக்கு வேலை வந்தது ! நானும் அவளும் தனித்து விடப்பட்டோம் ! இன்ப மொழிகளால் இனித்து விடப்பட்டோம் ! பூ, பழம் , கட்டில் நான்,அவள் ! பலநாள் பசித்தவன் அன்னம் தொடுவது போல நான் அவள் கன்னம் தொட்டேன் ! அந்தோ .......... கலங்கியிருந்தாள் பெண் ! கசிந்து கிடந்தது கண் ! ஏன் இந்த கண்ணீர் தோரணம் ? என்னவாயிருக்கும் அதற்குக் காரணம் ? கேட்டேன் ! அம்மா என்று விம்மினாள் ! அப்பா என்...