Skip to main content
தமிழ்


அன்னையால்

அறிமுகப்படுத்தப்பட்ட

ஆதிஅன்னை நீ !


விவரம் தெரிந்த பிறகு

தாய்பாலினும் மூத்தபால் ,

முப்பால் என அறிந்தோம் !


அறப்பசியையும் ,

அறிவுப்பசியையும் ,

அதனை அருந்தித்தான்

ஆற்றிக்கொண்டோம் !


வீரம் ,

உன்னிலிருந்து விளைந்ததுதான் !

காதல் கூட - நீ

கற்றுத்தந்தது தான !


உன்னைக்

காதாறக் கேட்டவர்கள் ,

செவியாலும் சுவை உணர முடியும் !

செவியாலும் மணம் நுகர முடியும் !

என பேதையைப் போல

போதையில் புலம்பிச் செல்கிறார்கள் !


உன்னைப் படித்துக்கொண்டே

உண்ணும் உணவுதான்

நிலா இல்லாத சமயங்களில்

எங்களுக்கான நிலாச்சோறு !

அது ,

அன்னையால் ஊட்டப்படும்

அன்புச்சோறு ! அறிவுச்சோறு !


கற்பனைக் கருவாகி

மொழிவழியே உருவாகி

உன்னை நீயே

படைத்துக் கொள்வதில்

இங்கே எண்ணற்ற படைப்பாளிகள்
உருவாகி விடுகிறார்கள் !


எங்களின் பிழைப்பே

உன்னால் தான நடக்கிறது !

உன்னை

விண்டெடுத்து விற்பவர்கள்

வாழ்வாங்கு வாழ்கிறார்கள் !


எங்களின்

தாகத்தைத் தணிக்கிற

ஊற்றும் நீயே !

எங்களின்

வாசிப்பில் நிறைகிற

காற்றும் நீயே !


சில சமயங்களில்

போதையை ஊட்டுவதால்

நீ , கள் !

பல சமயங்களில்

பாதையைக் காட்டுவதால்

நீயே , கடவுள் !


இப்போதே

இறப்பதென்றாலும் ,

இறைவனிடம் கேட்கவிருப்பது

ஒன்றே ஒன்று தான !


" இறைவா !

கடைசிச் சொட்டு உயிரை

கணநேரமாவது ,

நாக்கில் நிலைநிறுத்து !

'தமிழ் ' எனச்சொல்லிவிட்டு

தன்மானத்தோடு சாகிறேன் "


- என்பதுதான் அது !!!



Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது