Skip to main content

எல்லாம் முடிந்து விட்டது

எல்லாம் முடிந்து விட்டது .

அப்படித்தான்
தோன்றுகிறது !

அல்லது

அப்படி
நினைத்துக் கொள்கிறோம் !

அகதிகளாக வாழ்வதென்பது
அனாதைத்தனத்தின் உச்சம் !
அதுதான் எங்களின்
ஆண்டாண்டுகால
அவலத்திற்குக் கிடைத்த மிச்சம் !

தலைவன் இல்லாவிடினும்
தலைமை உயிர்ப்போடு தான் இருக்கிறது!

மறுபடியும் ஒரு தலைவன் வரலாம் !
பழையபடியே புரட்சி நடக்கலாம் !

ஆனால் எதற்கு ?

எங்களைப் பொறுத்தவரை ,

தன்மானம் என்பது ,
தோண்டிப் புதைக்கப்படவேண்டிய ஒன்று !

ஆணவம் ,
அழிவுக்கு அடிகோலுவது !

சுயமரியாதை ,
வன்முறையின் தந்தை !
அது ,
களையப்படவேண்டிய
மூட நம்பிக்கையும் கூட !

இப்போது
எங்களை
எல்லோரும் மறந்து விட்டார்கள் !

எங்களில் சிலர்
எங்கேயாவது எப்போதாவது
மீண்டும் கொல்லப்ப்டும் வரை
நாங்கள் அவர்களுக்கு
புளித்துப்போன பழைய செய்திதான் !

இந்த வாழ்க்கை கூட
நன்றாகத்தான் இருக்கிறது !

காலையில்
சூடான இட்லி , சட்னி , இத்யாதிகள் ............

அதன் பிறகு ,
வெள்ளை அரிசியில்
மணக்கும் மதிய உணவு !

சூரியன் சாய்ந்த இரவில்
சப்பாத்தியும் குருமாவும் !

முன்பு ,
எங்களின் கதைகளை
ஊர் படித்தது !
இப்போது ,
ஊர்கதைகளை
நாங்கள் படிக்கிறோம் !

அதைவிட ,
தொலைக்காட்சியில் தவமிருந்தால்
தொல்லையின்றிப் பொழுது போய்விடும் !

முன்பு போன்ற
இட நெருக்கடிகள்
இப்போது இல்லை !

ஆனாலும் ,
எங்களுக்கு இன்னும் வேண்டியது ....

கால் நோகாத
கழிப்பறையும் ,
குற்றாலம் போன்ற
குளியலறையும் தான் !

இழந்த வாழ்க்கை நரகம் என்பதால் ,
இந்த வாழ்க்கை சொர்க்கமாகத் தெரிகிறது !

நாங்கள் தோற்றுவிட்டோம் - என்று
ஒப்புக்கொள்வது கூட
ஒருவகையில் சுகமாக இருக்கிறது !

எல்லாம்
முடிந்து விட்ட பிறகு ,
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க
மனதளவில் தெம்பு இல்லை !

சிந்திய ரத்தம்
வீணாகக்கூடாது என்பதற்காகவே
மீண்டும் மீண்டும்
வீணாக ரத்தம் சிந்தியதை
நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது !

அமைதியாக வாழ்வதை
அடிமைத்தனம் என்றாலும்
அதைப்பற்றிக் கவலை இல்லை !

எல்லாம் முடிந்து விட்டது .


Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது