Skip to main content

கவிதையைப் பற்றிய கவிதை



என்ன பார்வை இது ?

தோட்டா கூடத் தோற்றுப்போகும் !


உண்மையைச் சொல்கிறேன்

வெள்ளையான உன் சிரிப்பில் - உள்ளம்

கொள்ளை போய் விட்டது !


உள்ளபடி சொல்கிறேன்

உன்னைப் பார்க்கும் வரை

நான் கவிஞனில்லை !


கண்ணுக்குள்ளே என்ன

கருவட்டக் கருப்பு ?

காந்தமா ?


அங்கத்தில் தங்கமா ?

தங்கத்தில் அங்கமா ?

குழப்பத்தை நிவர்த்தி செய் !


உன்னைப் பார்த்த பிறகு

என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன் !

ஏனெனில் எனக்கு எப்போதும்

கனவில்தான் தேவதைகள் தெரிவார்கள் !


என்னைக் கொல்ல வேண்டுமென்று

நீ நினைத்தால்

இன்னும் கொஞ்சம் சிரி !


உன்னைப் பார்த்த பிறகு

நான் முதலில்

காதலைத்தான் காதலித்தேன் !


உனது புகைப்படத்தைத் தான்

வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்

ஒருமணிநேரம் போனது தெரியவில்லை !


உன்னை உள்ளபடியே புகழ

தமிழில் தற்போது வார்த்தைகள் இல்லை

தமிழிலிலேயே இல்லையென்றால் இனி

தேவபாஷையைத் தான் தேடிக் கற்கவேண்டும் !


இந்த கிரகத்தின்

இன்னொரு நிலவா நீ ?

இப்படி ஜொலிக்கிறாய் !


சரி சரி.....

பார்வையால் பேசும் கலையை

எங்கு கற்றாய் ?

அதைச் சொல் முதலில் !


உனக்கொரு உவமையைச் சொல்ல

உலகக் கவிஞர்கள் ,

ஒன்றுகூடி மன்றாடுகிறார்கள் !

ம்ம்ஹூம் முடியவில்லை !



உன்னைப் பற்றி எழுதியதால்

இது

கவிதையைப் பற்றிய கவிதையாகிறது !!!




Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...