இப்படிக்கு இல்லத்தரசி
எங்கள் வீட்டில்
ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....

இல்லத்தரசியின் இயல்பான குமுறல். அடுத்த தலைமுறை மகள் அப்படி இல்லை என்பதில் மகிழ்வே.... அப்புறம் உங்கள் பதிவுகள் படித்து நீண்ட நாளாகிவிட்டது
ReplyDeleteவாருங்கள் தோழி ! வணக்கம் ...........நலமா ? நாம் உரையாடி நீண்ட நாட்கள் ஆகின்றன என நினைக்கிறேன். முன்னைப்போல் வலைப்பூவில் சுறுசுறுப்பாக இயங்கத்தோன்றவில்லை ! தங்கள் வாசிப்புக்கும் கருத்தும் மழ்ச்சியை அளிக்கின்றன நன்றிகள் ..............
Delete