மழை வீடு
வெளியே
மழை பெய்துகொண்டிருந்தது !
அறையில்
இரவுப்பணியின்
உறக்கத்திலிருந்த நான்
திடுக்கிட்டு விழித்து
கதவைத் திறந்து
மழை பார்த்தேன் !
முன்பெல்லாம்
மழை பெய்தால்
வீட்டில்
பஜ்ஜி சுடுவாள்
அம்மா !
தொண்டையைச்
செருமிக்கொண்டு
கதை சொல்லத்தொடங்குவார்
அப்பா !
பஜ்ஜி வாசமும்
கதை வாசமும்
சேர்ந்து இனிதே
வீட்டை நிறைக்கும் !
இந்த நினைவுகளை
மனதில் சுமந்தபடி
நான்
பெய்த மழையை
வெறித்துக் கொண்டிருந்தேன் !
பஜ்ஜியையும்
கதைகளையும்
நினைவுகளில் சுமந்தபடி
ஊரில்
அம்மாவும் அப்பாவும்கூட
இதேபோல்
மழையை வெறித்துக்கொண்டிருக்கலாம் !
மழை பெய்துகொண்டிருந்தது !
அறையில்
இரவுப்பணியின்
உறக்கத்திலிருந்த நான்
திடுக்கிட்டு விழித்து
கதவைத் திறந்து
மழை பார்த்தேன் !
முன்பெல்லாம்
மழை பெய்தால்
வீட்டில்
பஜ்ஜி சுடுவாள்
அம்மா !
தொண்டையைச்
செருமிக்கொண்டு
கதை சொல்லத்தொடங்குவார்
அப்பா !
பஜ்ஜி வாசமும்
கதை வாசமும்
சேர்ந்து இனிதே
வீட்டை நிறைக்கும் !
இந்த நினைவுகளை
மனதில் சுமந்தபடி
நான்
பெய்த மழையை
வெறித்துக் கொண்டிருந்தேன் !
பஜ்ஜியையும்
கதைகளையும்
நினைவுகளில் சுமந்தபடி
ஊரில்
அம்மாவும் அப்பாவும்கூட
இதேபோல்
மழையை வெறித்துக்கொண்டிருக்கலாம் !
வணக்கம்
ReplyDeleteஅழகிய கவிதை மிகஅருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழத்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteஅருமை! மழைநினைவுகளை கிளறிவிட்டீர்கள்!
ReplyDeleteமழைப்பேச்சு கேட்க வருகை புரிந்த தங்களுக்கு நன்றிகள் நண்பரே
ReplyDelete