பேருந்தில் அந்த நால்வர்
எனக்கு முன்னே
ஒருவன்
அமர்ந்திருக்கிறான் !
பின்னே
இன்னொருவன்
அமர்ந்திருக்கிறான் !
வலப்புறமாக
மற்றொருவன் !
இடப்புறமாக
வேறொருவன் !
அதுவொரு
பேருந்து !
வலப்புறம்
அமர்ந்தவன்
தன் வசதிப்படி
அமர்ந்திருந்ததால்
என் வலக்கையை
வாகாக வைக்கச்
சௌகரியமில்லை !
இடப்புறம்
அமர்ந்தவன்
இடித்துக்கொண்டு
அமர்ந்ததனால்
என்
இடதுகைக்கும்
இடவசதியில்லை !
முன்னேயாவது
கால்நீட்டிச் சற்று
ஆறுதல் அடையலாமென்றால்
முன்னேயிருந்தவன் கால்
முரட்டுத்தனமாய்
இடறியது !
பின்னேயாவது
கால் நீட்டி
ஆசுவாசப்படலாமென்றால்
பின்னேயிருந்தவன் கால்
பிடாரித்தனமாய்ப்
பிறாண்டியது !
நிற்க ............
என்
கோபமெல்லாம்
எனக்கு நாலாபுறமும்
அமர்ந்திருந்த
அந்த நால்வர்
மீதில்லை !
அந்த நால்வருக்கு
மத்தியில் கொண்டுபோய்
என்னைக் கிடத்திய
என் பாழாய்ப்போன
விதியின் மீதுதான் !
ஒருவன்
அமர்ந்திருக்கிறான் !
பின்னே
இன்னொருவன்
அமர்ந்திருக்கிறான் !
வலப்புறமாக
மற்றொருவன் !
இடப்புறமாக
வேறொருவன் !
அதுவொரு
பேருந்து !
வலப்புறம்
அமர்ந்தவன்
தன் வசதிப்படி
அமர்ந்திருந்ததால்
என் வலக்கையை
வாகாக வைக்கச்
சௌகரியமில்லை !
இடப்புறம்
அமர்ந்தவன்
இடித்துக்கொண்டு
அமர்ந்ததனால்
என்
இடதுகைக்கும்
இடவசதியில்லை !
முன்னேயாவது
கால்நீட்டிச் சற்று
ஆறுதல் அடையலாமென்றால்
முன்னேயிருந்தவன் கால்
முரட்டுத்தனமாய்
இடறியது !
பின்னேயாவது
கால் நீட்டி
ஆசுவாசப்படலாமென்றால்
பின்னேயிருந்தவன் கால்
பிடாரித்தனமாய்ப்
பிறாண்டியது !
நிற்க ............
என்
கோபமெல்லாம்
எனக்கு நாலாபுறமும்
அமர்ந்திருந்த
அந்த நால்வர்
மீதில்லை !
அந்த நால்வருக்கு
மத்தியில் கொண்டுபோய்
என்னைக் கிடத்திய
என் பாழாய்ப்போன
விதியின் மீதுதான் !
Comments
Post a Comment