அப்பா
ஒரு சூரியனைப்
போன்றதுதான்
அப்பாவின் கோபமும் !
பொழுதானால்
மறைந்துவிடும் !
===============================================
பாசங்காட்டும் போது
அவர்
அப்பா !
அறிவுரை சொல்லும்போது
அவர்
தந்தை !
==============================================
காயத்திற்கு
மயிலிறகு போன்றவள்
அம்மா !
மருந்தைப் போன்றவர்
அப்பா !
மயிலிறகு
காயத்தின் வலியைக்குறைக்கும் !
மருந்துதான்
காயத்தை ஆற்றும் !
===============================================
நாம்
ஆயிரம் திட்டினாலும்
பிறர்
அப்பாவைத் திட்டும்போது
இயல்பாக எழும்
கோபத்தின் பெயர்தான்
ரத்தம் !
===============================================
அப்பாவுக்காக
மகன்
தலை குனியலாம் !
மகனுக்காக
அப்பா
தலைகுனியக் கூடாது !
==============================================
இந்த உலகத்திலேயே
உன்னைக்
கைநீட்டித்திட்டும் உரிமை
உன்
அப்பனுக்குத்தானிருக்கிறது !
எவனுக்குமில்லை !
===============================================
உன் பொருட்டு
உன்
அப்பாவின் கண்களில்
நீர் வருவது
நான்கு பேர்
உன்னைப்
பாராட்டும் போதுமட்டும்
இருக்கட்டும் !
===============================================
வேறெந்தப்
புத்தகமும்
தேவையில்லை !
உன் தந்தையின்
வாழ்க்கை எனும்
புத்தகத்தைப் படி !
உருப்பட்டுவிடுவாய் !

Comments
Post a Comment