ஈழம் உங்கள்
புத்தியில் இருந்தது !
ஈழம் எங்கள்
இதயத்தில் இருந்தது !
-------------------------------------------------
காத்திருந்தீர்கள்
நீங்கள் !
தவமிருந்தோம்
நாங்கள் !

நீங்கள்,
எங்கள் தூதுவர்களையும்
கொன்றீர்கள் !
நாங்கள்,
தொலைகிறது என்று
உங்கள் ஒற்றர்களையும்
மன்னித்தோம் !

உங்கள்
கண்ணீர்ச்சுரப்பியும்
வியர்வையைச்
சுரந்தது !
எங்கள்
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீரைச்

உங்களுடையவர்கள்
படைவீரர்கள் !
எங்களுடையவர்கள்
உடன்பிறப்புக்கள் !

உங்கள் தலைவன்
இருக்கிறான் !
எங்கள் தலைவன்
வாழ்கிறான் !

ஓலமிட்டீர்கள்
நீங்கள் !
முழக்கமிட்டோம்

தந்திரநரிகள்
நீங்கள் !
விடுதலைப்புலிகள்

போர்க்குற்றவாளிகள்
நீங்கள் !
புரட்சியாளர்கள்

உங்களுக்கது
களம் !
எங்களுக்கது
வாழிடம் !

உங்களுடையது
வெறி !
எங்களுடையது
தாகம் !

சண்டை !
எங்களுடையது
போர் !

துப்பாக்கியில்
குண்டுகள் !
எங்கள்
துப்பாக்கியில்
கொள்கைகள் !

சரித்திரத்தின்
கருப்புப்பக்கத்தில்
நீங்கள் !
சரித்திரத்தின்
சிவப்புப்பக்கத்தில்

உடல்கள் மட்டும்
இறந்துவிட்டன !
உங்கள்
உடல்கள் மட்டும்
நடமாடுகின்றன !

வெற்றியின்
மிதப்பில்
நீங்கள் !
தோல்வி என்ற
படிக்கட்டில்

உங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
புதைக்கப்பட்டோம் !
எங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
விதைக்கப்பட்டோம் !

உணர்வுக் குவியலாய் குமுறிடும் வரிகள்!
ReplyDeleteஇதய வலியை எழுதிச் சென்றீர்கள்... அருமை!
கருத்துக்கு நன்றி தோழி
Delete//உங்களைப் பொறுத்தவரை நாங்கள் புதைக்கப்பட்டோம் !
ReplyDeleteஎங்களைப் பொறுத்தவரை நாங்கள் விதைக்கப்பட்டோம் !//
மிகவும் உணர்வுபூர்வமான வரிகள்.
உணர்வுப்பூர்வமான வரிகளை உணர்ந்ததற்கு நன்றி ஐயா
Delete