Skip to main content

Posts

 சிறைவாசி அவன் சிறையில் இருந்து வெளிப்பாட்டான் ! அவனுக்கு அன்று விடுதலை ! குற்றம் ? நிதி அவனை மோசடி செய்தது ! எனவே நிதியை அவன் மோசடி செய்தான் ! பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் ! இவன் , சிலநாள் திருடன் சீக்கிரம் அகப்பட்டான் ! வாதாட இவனிடம் நிதியில்ல்லை ! எனவே நீதி வென்றது ! சிறை, இவனுக்கு ஆனது அறை ! ஆறுவருடம் சிறையில் வனவாசம் ! இப்போது தண்டனை முடிந்து மீண்டும் இவனுக்கு ஜனவாசம் ! வெளியே வெயிலடித்தது ! அடுக்கிவிட்டது போல் கட்டிடங்கள் ! முடுக்கிவிட்டது போல்  வாகனங்கள் ! இவன் வீடுசென்ற போது சகோதரன் செருப்ப்பைக் காட்டினான் ! தகப்பன் தவறிவிட்டான் ! தாய் முதியோர் இல்லத்தில் ! உறவுகள் ஒன்றுகூடிக் காறித்துப்பின ! அக்கம்பக்கத்தார் அகதியைப் போலப் பார்த்தனர் ! வேலைதேடிச் சென்றவிடத்தில் விரட்டியடிக்கப்பட்டான் ! அடுத்தவேளைச் சோறு கேள்விக்குறியானது ! பிச்சையெடுப்பது குறித்து மனதுக்குள் பரிசீலித்தான் ! அதற்கு சிறை செல்வதே கௌரவம் என்று தோன்றியது ! செய்ய வேலை ! உண்ண உணவு ! உடுக்க உடை ! உறங்க உறைவிடம் ! என்ன தனிமை தான் வாட்டும் ! இப்போதுமட்டும் என்ன வாழுகிறதாம் ! இப்படியாக இரண்டு நிம...
மனிதன் என்பவன் ............. ஒரு மங்களகரமான வெள்ளிக்கிழமை ! குளித்துவிட்டு மடியாகக் கோவிலுக்குக் கிளம்பினேன் ! பக்கத்துவீட்டுக் குழந்தை வீறிட்டழுதது ! இருசக்கர வாகனமொன்று சேறிறைத்தது ! எதிரில் வந்தவன் காறி உமிழ்ந்தான் ! கழிவுநீர் ஊர்தி கடந்து போனது ! எவனோ எவனையோ திட்டிய கெட்டவார்த்தை காற்றுவாக்கில் காதில் வந்தது ! இனவிருத்தியில் இரு நாய்கள் ! தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி ! பக்கத்தில் பன்றியிறைச்சி ! குடித்துவிட்டு ஒருவன் வாந்தியெடுத்தான் ! கோவிலில் வாங்கிய பூ வாடியிருந்தது ! ஒரு கிழிந்த நோட்டு கைக்கு வந்தது ! சில்லறை இல்லையாம் ! நுழையும்போதே வலதுகால் தடுக்கியது ! போடாத காசிற்குப் பிச்சைக்காரி சபித்து அனுப்பினாள் ! உள்ளே கொடுங்கூட்டம் ! வாங்கிய விளக்கில் திரியைக் காணவில்லை ! வரிசையில் ஒருவன் காலை மிதித்தான் ! கொடுத்த தேங்காய் அழுகிவிட்டது ! தரிசனம் காணும்போது தலைகள் மறைத்தன ! ஒற்றும்போது கற்பூரம் அணைந்தது ! அந்தக்கிழிந்த நோட்டை அய்யர் கூப்பிட்டுத் திருப்பிக் கொடுத்தார் ! பாதி வரிசையில் பிரசாதம் ...
திருமணம் 2013    ' சொல்லியனுப்புகிறோம் ' என்ற சொல்லை காலம் என்ற விலை கொடுத்து பெண் வீட்டார் வாங்கி விட்டனர் ! ------------------------------ -------------- இன்ஜினியர் பெண்ணும் இன்ஜினியர் ஆணும் தம்பதியாவது காலத்தின் கட்டாயம் ! டாக்டருக்கும் இது டிட்டோ ! ------------------------------ -------------- திருமணம் கல்லூரியில் நிச்சயிக்கப்படுகிறது ! ------------------------------ -------------- மாப்பிள்ளையின் சம்பளமும் மறைமுக வரதட்சணைதான் ! கொண்டுவாருங்கள் இதற்கொரு இ. பி. கோ ! ------------------------------ -------------- குவித்துத்தான் வைக்கிறார்கள் ஆண் ஜாதகத்தை ! பொறுக்கித்தான் எடுக்கிறார்கள் பெண் ஜாதகத்தை ! ------------------------------ -------------- ஒவொரு வினைக்கும் எதிர்வினை உண்டு ! ஆணினமே அனுபவி ! ------------------------------ -------------- காலஸ்த்ரி, திருநாகேஸ்வரம், திருவிடந்தை, திருமணஞ்சேரி ....................... அடுத்து என்ன ஜோசியரே ? ------------------------------ -------------- தந்தை மகற்காற்றும் உதவி திருமண...
ஒரு விடைபெறுதல்  தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது ! மேஜையில் எதிரெதிராக நீ ! நான் ! தேநீருடன் கூடிய நம் கடைசிச்சந்திப்பு ! தலைகுனிந்தபடி நீ ! உன்னையே பார்த்தபடி நான் ! ஒருவகையில் நம் முதல் சந்திப்பிலும் இப்படித்தானிருந்தோம் ! வேடிக்கைதான் ! இருவீட்டார் சம்மதத்துடன் நாம் பிரியப்போகிறோம் ! சுற்றிலும் ஆங்காங்கே தேநீர் அருந்தும் காதலர்களின் ஆசிர்வாதத்தோடு நாம் பிரியப்போகிறோம் ! என் இரண்டுவார தாடி உனக்குப்பிடிக்காதுதான் ! நினைவிருக்கிறதா இந்த  நீல நிறச்சட்டை நீ வாங்கித்தந்தது ! என் கை நகங்களில் அழுக்குப் படிந்துள்ளது ! சற்று முன்னர்தான் சிகெரெட் பிடித்தேன் ! என்னில் எல்லாமே இயற்கையாக இருக்கின்றன என் புன்னகையைத்தவிர ! எனக்குப்பிடித்த மஞ்சள் சுடிதாரில் நீ வரவில்லை ! பவுடர் சற்று அதிகம் ! கூந்தலில் ரோஜா இல்லை ! நான் வாங்கித்தந்த பிளாஸ்டிக் வளையல்களை உன்கைகள் அணிந்திருக்கவில்லை ! உதட்டுச்சாயத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் ! உன்னில் எல்லாமே செயற்கையாக இருக்கின்றன ! உன் கண்களைத்தவிர ! அந்தக்கண்களி...
  ஈழம் உங்கள் புத்தியில் இருந்தது ! ஈழம் எங்கள் இதயத்தில் இருந்தது ! ------------------------------------------------- காத்திருந்தீர்கள் நீங்கள் ! தவமிருந்தோம் நாங்கள் ! ------------------------------------------------- நீங்கள், எங்கள் தூதுவர்களையும் கொன்றீர்கள் ! நாங்கள், தொலைகிறது என்று உங்கள் ஒற்றர்களையும் மன்னித்தோம் ! ------------------------------------------------- உங்கள் கண்ணீர்ச்சுரப்பியும் வியர்வையைச் சுரந்தது ! எங்கள் வியர்வைச்சுரப்பியும் கண்ணீரைச் சுரந்தது ! ------------------------------------------------- உங்களுடையவர்கள் படைவீரர்கள் ! எங்களுடையவர்கள் உடன்பிறப்புக்கள் ! ------------------------------------------------- உங்கள் தலைவன் இருக்கிறான் ! எங்கள் தலைவன் வாழ்கிறான் ! ------------------------------------------------- ஓலமிட்டீர்கள் நீங்கள் ! முழக்கமிட்டோம் நாங்கள் ! ------------------------------------------------- தந்திரநரிகள் நீங்கள் ! விடுதலைப்புலிகள் நாங்கள் ! ---------------------------------...
குறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் எனக்கு எழுதியனுப்புங்கள். கடைக்காரன்  அவன், கடைக்காரன் ! செம்மாந்த நடைக்காரன் ! வெண்மைநிற உடைக்காரன் ! அவன், ஐம்பது கடந்த முதியவன் ! நான் அந்த வீதிக்குப் புதியவன் ! நான் ??? அதொன்றுமில்லை ! வந்தது ஓலை ! அழைத்தது ஆலை ! கிடைத்தது வேலை ! வணங்கினேன் அன்னையை ! வந்தடைந்தேன் சென்னையை ! உடனடித்தேவையெல்லாம் ........................... காலடிக்குத் தடம் ! தங்குவதற்கோர் இடம் ! நீர் பிடிக்கக் குடம் ! பழனி முருகன் படம் ! யாவருக்கும் என் முகம் தெரியாது ! நான் அப்பாவியென்ற என் அகம் தெரியாது ! அவ்விடத்தே எனக்கு நண்பர்கள் இல்லை ! ஊரோடு முடிந்தது என் நட்பின் எல்லை ! இங்கே நான் கேட்க முடியாது ' மச்சி ' என்ற சொல்லை ! அவ்விடத்திற்கே ஆலையின் வண்டி வரும் ! பத்துக்கல் கடந்து போனால் பக்கத்திலே கிண்டி வரும் ! என்ன செய்வது ? யாரைக் கேட்பது ? தலையைச் சொறிந்தேன் ! பார்வையை எறிந்தேன் ! கடையொன்றைப் பார்த்துவிட்டேன் ! உடனடியாக மூக்கினில் வேர்த்துவிட்ட...