திருமணம் 2013
' சொல்லியனுப்புகிறோம் '
என்ற சொல்லை
காலம் என்ற
விலை கொடுத்து
பெண் வீட்டார்
வாங்கி விட்டனர் !
------------------------------
இன்ஜினியர் பெண்ணும்
இன்ஜினியர் ஆணும்
தம்பதியாவது
காலத்தின் கட்டாயம் !
டாக்டருக்கும் இது
டிட்டோ !
------------------------------
திருமணம்
கல்லூரியில்
நிச்சயிக்கப்படுகிறது !
------------------------------
மாப்பிள்ளையின்
சம்பளமும்
மறைமுக
வரதட்சணைதான் !
கொண்டுவாருங்கள்
இதற்கொரு
இ. பி. கோ !
------------------------------
குவித்துத்தான்
வைக்கிறார்கள்
ஆண் ஜாதகத்தை !
பொறுக்கித்தான்
எடுக்கிறார்கள்
பெண் ஜாதகத்தை !
------------------------------
ஒவொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு !
ஆணினமே
அனுபவி !
------------------------------
காலஸ்த்ரி,
திருநாகேஸ்வரம்,
திருவிடந்தை,
திருமணஞ்சேரி .......................
அடுத்து என்ன
ஜோசியரே ?
------------------------------
தந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு
சாதி பார்க்காச் செயல் !
------------------------------
அஷ்டமச்சனியாம் !
முப்பது
முடிய வேண்டுமாம் !
ஜென்ம குருவாம்
ஒருவருடம்
போக வேண்டுமாம் !
அடுத்து வரும்
ராகு தசையோ
பதினெட்டு வருடமாம் !
அட ஆண்டவா !!!!!!!!!!
------------------------------
படித்துக்
கொண்டிருக்கும் பெண்
வரனாய் வந்தால் ........
பெற்றோர்களே உஷார் !
------------------------------
பஜ்ஜி சொஜ்ஜி
தின்று விட்டு
பாட்டு கேட்டு
வந்தது
அந்தக்காலம் !
நேர்முகத்தேர்வொன்றை
நடுவீட்டில் சந்தித்து
நாக்குத்தள்ளி
வந்தது
இந்தக்காலம் !
------------------------------
திருமண அகராதியில்
நம்பிக்கை துரோகம்
என்பதன் பொருள்
புத்திசாலித்தனமான
தேர்ந்தெடுப்பு !
------------------------------
இந்தியாவின்
மாப்பிள்ளைக் களஞ்சியங்கள்
எனப்படுவவை -----------------------
விடை : சாப்ட்வேர் நிறுவனங்கள் !
------------------------------
கனவு காணாதே !
பெண் பார்த்து
நிச்சயிக்கப்பட்டு
தாலி கட்டி
திருமணம் முடிந்து
முதலிரவும்
முடிந்தால் தான்
அவள் உன்
மனைவி !
------------------------------
பல்லைப் பிடித்துப்
பார்த்துத்தான்
மாப்பிள்ளை
வாங்கப்படுகிறது !
------------------------------
முகநூலின்
காதலெல்லாம்
திருமணத்தில்
சேர்த்தியில்லை !
------------------------------
திருமணத்திற்கு
முன்பான
ஒரு பழைய காதலில்
எல்லாம் இருந்ததாம்
எல்லை மட்டும்
தாண்டவில்லையாம் !
இதுதானய்யா
இந்தஊர்
கற்பு !
------------------------------
பெண்பாவம்
பொசுக்கிவிடும் !
ஆண்பாவம்
இன்னொரு ஆணுக்கு
வாழ்க்கை தரும் !
------------------------------
அப்போதும்
இப்போதும்
சுயம்வரம்
ஆணுக்கு நடந்ததாய்
சரித்திரமுண்டோ ?
------------------------------
ஆண்
வயதுக்கு
வந்தாலும்
இனி
சடங்கு நடத்தலாம் !
------------------------------
முப்பது கடந்து
முடி கொட்டி
தொப்பை வந்து
சுமார் மூஞ்சி
சுமார் சம்பள
ஆணாய் நீயிருந்தால் ..........
ஸாரி நண்பா !
better luck to next ஜென்மம் !!!
இன்றைய நாட்டு நடப்புகளை நயம்படச்சொல்லும் அருமையான ஆக்கம்.
ReplyDelete//better luck to next ஜென்மம் !!!//
சூப்பரான எதிர்பாரா முடிவு. ;)
இக்கால நிகழ்வு அப்படித்தான் இருக்கிறது ஐயா ! உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி !
Deleteவரதட்சணைக் கொடுமை வாட்டுது பெண்களை என்றால்
ReplyDeleteஇது உச்சக் கொடுமை! எங்கு போய் உரைப்பது சொல்!
நீங்கள் உதிர்த்த ஒவ்வொன்றும் அத்தனை பெறுமதியானவை!
வாழ்த்துக்கள் சகோ!
உயிரோட்டமான தங்கள் கருத்து இந்தக்கவிதையின் உயிரோட்டத்தை மேலும் அதிகரிக்கிறது தோழி ! நன்றி !
Delete