மனிதன் என்பவன் .............
ஒரு
மங்களகரமான
வெள்ளிக்கிழமை !
குளித்துவிட்டு
மடியாகக்
கோவிலுக்குக்
கிளம்பினேன் !
பக்கத்துவீட்டுக் குழந்தை
வீறிட்டழுதது !
இருசக்கர வாகனமொன்று
சேறிறைத்தது !
எதிரில் வந்தவன்
காறி உமிழ்ந்தான் !
கழிவுநீர் ஊர்தி
கடந்து போனது !
எவனோ
எவனையோ திட்டிய
கெட்டவார்த்தை
காற்றுவாக்கில்
காதில் வந்தது !
இனவிருத்தியில்
இரு நாய்கள் !
தள்ளுவண்டியில்
மாட்டிறைச்சி !
பக்கத்தில்
பன்றியிறைச்சி !
குடித்துவிட்டு
ஒருவன்
வாந்தியெடுத்தான் !
கோவிலில்
வாங்கிய பூ
வாடியிருந்தது !
ஒரு
கிழிந்த நோட்டு
கைக்கு வந்தது !
சில்லறை இல்லையாம் !
நுழையும்போதே
வலதுகால்
தடுக்கியது !
போடாத காசிற்குப்
பிச்சைக்காரி
சபித்து அனுப்பினாள் !
உள்ளே
கொடுங்கூட்டம் !
வாங்கிய விளக்கில்
திரியைக் காணவில்லை !
வரிசையில்
ஒருவன்
காலை மிதித்தான் !
கொடுத்த தேங்காய்
அழுகிவிட்டது !
தரிசனம் காணும்போது
தலைகள் மறைத்தன !
ஒற்றும்போது
கற்பூரம்
அணைந்தது !
அந்தக்கிழிந்த நோட்டை
அய்யர்
கூப்பிட்டுத்
திருப்பிக் கொடுத்தார் !
பாதி வரிசையில்
பிரசாதம் தீர்ந்தது !
வெளியே வந்தால்
செருப்பைக் காணவில்லை !
அணையாதிருந்த
துண்டுபீடி
காலைச்சுட்டது !
அறைக்கு வந்தால்
மின்சாரமில்லை !
இவையெல்லாம் நடந்து
ஆறுநாட்கள் கழித்து ....................
ஒரு
மங்களகரமான
வெள்ளிக்கிழமை !
குளித்துவிட்டு
மடியாகக்
கோவிலுக்குக்
கிளம்பினேன் !
காரணம்,
மனிதன் என்பவன்
பழக்கத்திற்கு
அடிமைப்பட்டவன் !
ஒரே நாளில் இவ்வளவு பிரச்சனைகளை அனுபவித்தும், திரும்ப அங்கு செல்லத்தோன்றுகிறது என்றால் அதற்குக்காரணம் ’மனிதன் என்பவன்
ReplyDeleteபழக்கத்திற்கு அடிமைப்பட்டவன் !’ என்று சொல்லியுள்ளீர்கள்.
இருக்கலாம். இருப்பினும் அதில் பழக்கத்துக்கு அடிமையானதைத் தவிர வேறு ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது போலல்லவா தெரிகிறது.
பகிர்வுக்கு நன்றிகள்.
வேறு எதோ ஈர்ப்பும் உள்ளது ! அதைச் சொல்லத்தெரியவில்லை. கருத்திற்கு மிக்க நன்றி ஐயா !
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி ஐயா ! மற்றபடி இந்த ஆண்டும் மற்ற எல்லா ஆண்டுகளைப்போல வெறுமனே கடந்து போகப்போகிறது அவ்வளவுதான் !
ReplyDeletenice deva
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...