வழிப்போக்கனான நான்
அந்தச் சாலைக்கூட்டம் பிளந்து
எட்டிப்பார்க்கிறேன் !
ஒருவன்
அடிபட்டிருந்தான் !
அவன்
அநேகமாக
இறந்து விட்டிருக்கலாம்
எனச் சொல்லப்பட்டது !
பார்த்துப் பழகிய
ஒரு திரைப்படத்தை
உயிரில்லாமல்
பார்ப்பது போல
காவலர்கள்
பார்த்துக் கொண்டிருந்தார்கள் !
கீழே சரிந்திருந்தது
அவன்
இருசக்கர வாகனம் !
தலைக்கவசம்
இல்லை !
குடித்து வேறு
இருக்கிறானாம் !
சர்தான் !
அவசரகால ஊர்தி
வந்த பிறகும்
யாவரும்
எதற்கோ
காத்திருந்தனர் !
பார்வையிட
அமைச்சர்
கிமைச்சர்
வருகிறாரோ ?
அடிபட்டவன்
தொண்டைக்குழியில்
உயிரின் அறிவிப்பாக
ஒரு மெல்லியஅசைவு
தென்படுமுன்
அடியேன்
அவ்விடம்
விட்டகன்றேன் !
அந்தச் சாலைக்கூட்டம் பிளந்து
எட்டிப்பார்க்கிறேன் !
ஒருவன்
அடிபட்டிருந்தான் !
அவன்
அநேகமாக
இறந்து விட்டிருக்கலாம்
எனச் சொல்லப்பட்டது !
பார்த்துப் பழகிய
ஒரு திரைப்படத்தை
உயிரில்லாமல்
பார்ப்பது போல
காவலர்கள்
பார்த்துக் கொண்டிருந்தார்கள் !
கீழே சரிந்திருந்தது
அவன்
இருசக்கர வாகனம் !
தலைக்கவசம்
இல்லை !
குடித்து வேறு
இருக்கிறானாம் !
சர்தான் !
அவசரகால ஊர்தி
வந்த பிறகும்
யாவரும்
எதற்கோ
காத்திருந்தனர் !
பார்வையிட
அமைச்சர்
கிமைச்சர்
வருகிறாரோ ?
அடிபட்டவன்
தொண்டைக்குழியில்
உயிரின் அறிவிப்பாக
ஒரு மெல்லியஅசைவு
தென்படுமுன்
அடியேன்
அவ்விடம்
விட்டகன்றேன் !
Comments
Post a Comment