Skip to main content
துப்பாக்கி



'துப்பார்க்குத் துப்பாய'
படிக்குமுன்பே
துப்பாக்கி
எனக்கு அறிமுகம் !

நானறிந்த துப்பாக்கியில்
அப்போது
ஆறு குண்டுகள் !
இப்போது
எண்ணிக்கை
சற்றுக் கூடியிருக்கலாம் !

ஒரு துப்பாக்கியை
முறைப்படி வாங்கும்
விவரங்களை
இணையத்தில்
தேட வேண்டும் !

கைவசம்
ஒரு லகரம் இருக்கிறது !
தொகை சற்றுக்கூடுதலானால்
வங்கிக்கடன்
பெற்றுக்கொள்ளலாம் !

துப்பாக்கியோடு சேர்த்து
சுடுவதற்கான பயிற்சி
இலவசமா அல்லது
அது தனியா ?

சுட்டுப்பழக
கூடுதல் குண்டுகள்
தருவார்களா ?

பீரோவின்
ரகசிய மூலையில்
அதைப் பதுக்கவேண்டும் !
அந்த
ஒற்றைச்சாவி
எப்போதுமிருக்கும்
என் உள்பாக்கெட்டில்
இதயம் தொட்டுக்கொண்டு !

எனக்கு
எதிரிகள்
இருக்கிறார்கள் தான் !
அவர்களைக் கொல்லவேண்டிய
தேவை எனக்கில்லை !
மேலும்,
அவர்களைக் கொல்ல
வாய்த்துப்பாக்கி போதும் !
கைத்துப்பாக்கி
தேவையில்லை !

வேட்டையாட
விருப்பம்தான் !
காடுகளைத்தான்
காணவில்லை !
ஆகவே
அந்தக்காரணமும் இல்லை !

பாதுகாப்புக்கு
நான்
துப்பாக்கியை விட
பணத்தை நம்புகிறேன் !

தற்கொலை புரிவதென்றால்
தூக்கமாத்திரை தின்று
சுகமாகச் சாகலாம் !
துப்பாக்கி தேவையில்லை !

பறவை
சுடுவதென்றால்
எஞ்சியிருக்கும்
காக்காவைத்தான்
சுடவேண்டும் !
ஆனால்,
காக்காக்கறி
ஆண்மைக்கு நல்லதென்ற
மருத்துவக் குறிப்பை
நானெங்கும் கண்டதில்லை !
ஆகவே,
அதுவும் காரணமில்லை !

பின்னே,
நான் ஏன்
துப்பாக்கி வாங்கவேண்டும் ?
மண்டையைப் போட்டு
உடைத்துக் கொள்ளாதீர்கள் !
காரணம்
மிக எளியது !

என்
பக்கத்து வீட்டுக்காரன்
ஒரு துப்பாக்கி
வைத்திருக்கிறான் !







Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது