Skip to main content
நாயும் நானும்


அதுவொரு
மதிய வேளை !
உருவாகிக்கொண்டிருந்த
புதிய வேளை !

யாருமில்லை
தெருவில் !
நான்
நடந்து கொண்டிருந்தேன்
வியர்வையில் குளித்த
உருவில் !

சூழலில்
நெருப்பு !
தவித்தது
செருப்பு !
நீரூற்றி
வெளியில் வைத்தால்
வெந்துவிடும்
பருப்பு !

இப்போதைக்கு
யாருமில்லை
அறையில் !
கொஞ்சநேரம்
விடுதலை
எனக்கந்த
சிறையில் !

நாடலாம்
தனிமையை !
பாடலாம்
இனிமையை !

என்ன
இனிமை
என்கிறீர்களா ?

ஆபாசப்படம்
மற்றும்
சுயமைதுனம் !

பின்னே
பாழும் பிரம்மச்சாரியான
நான்
தனிமை கிடைத்தால்
பகவத் கீதையா
படிக்க முடியும் !

இதைச்சொல்வதில்
எனக்குத்
தயக்கமில்லை !
போலிப்புனிதங்களில்
எனக்கு
மயக்கமில்லை !

மேலும்
இம்மாதிரி
எழுதி வைத்தால்தான்
இக்கவிதையை
நவீனத்தில்
சேர்ப்பார்கள் !

இல்லையெனில்,

மரபு
என்று கூறி
பரணில் போடுவார்கள் !

எதில் விட்டேன் ?

ஆங் ,,,,,,,,,,

தனிமையைக்
கொண்டாடலாம் !
இன்பத்தில்
திண்டாடலாம் !
இன்ன பிற ,,,,
இன்ன பிற ,,,,,,,,,,

அப்போதுதான்
அதைப்பார்த்தேன் !

அதுவொரு
நாய் !
பயமுறுத்தியது
அதன்
வாய் !

அது,
பல்லைக்காட்டிக்
குரைத்தது !
அதன் பாஷையில்
கோபமாய் எதையோ
உரைத்தது !

ஐயகோ !

இதென்ன
வம்பு ?
தேவையில்லாத
துன்பத்தின்
அம்பு !
கையிலில்லை
கம்பு !
ஓடுவதற்குக்
காலிலில்லை
தெம்பு !
பெருகியோடிய
வியர்வையிருக்கும்
ஒரு
சொம்பு !

நானோ
போய்க்கொண்டிருக்கிறேன்
சிவனே என்று !
இது ஏன்
விளித்துத் தொலைக்கிறது
இவனே என்று !

நான்
' ம்கும் ' என்றேன் !
பாக்கெட்டில்
கைவிட்டேன் !
கண்ணாடியை
சரி செய்தேன் !

அச்சமயத்தில்
என்னிடம் தோன்றிய
எதிர்வினைகள்
இவை !

என் மனநிலையை
சந்தேகிக்கிறீர்கள்
தெரிகிறது !

நாய் கடித்தால்
முதலுதவியாக
என்ன செய்யலாம் ?

இதுமாதிரி
நாய்க்கடிகளிடமிருந்து
தப்புவதெப்படி ?

நாய்க்கடித்
தடுப்பு உறைகள்
எங்கே கிடைக்கும் ?

நாய்கள் காப்பகத்தில்
என்ன
ஆணி புடுங்குகிறார்களா ?

ஆலையில்
ஒருவாரம்
விடுப்பு தருவார்களா ?

நாய் கடித்தது என்றால்
நண்பர்கள்
சிரிப்பார்களோ ?

முன்பெல்லாம்
பதினாறு ஊசியில்
ரணமாகிவிடும் !
இப்போதோ
ஒரே ஊசியில்
குணமாகிவிடும் !

என்ன !

நாயைத்தான்
காக்க வேண்டும் !
கண்ணில்
எண்ணெய் ஊற்றி
அதன் செய்கைகளை
நோக்க வேண்டும் !

இவ்வாறாக நான்
எண்ணிக்கொண்டிருக்கையில் .......

என்னெதிரே
வந்த
அந்த நாய்,
உறுமியபடியே
என்னைக்கடந்து
என் பின்னே
வந்துகொண்டிருந்த
இன்னொரு நாயை
நோக்கிச் சென்றது !


Comments

  1. வணக்கம்

    கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதையின் வரிகளை இரசித்த தங்களுக்கு மிக்க நன்றி திரு ரூபன் அவர்களே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...