கடைசிமழை அந்தக்கடைசி மழையை, யாராவது திட்டியிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், சிலர் நனைந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், சிலர் நனையத் தவறியிருக்கலாம் ! அந்தக்கடைசில் மழையில், ஒரு புணர்வு நடந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், ஒரு கப்பல் விடப்பட்டிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், யாராவது செத்துப் போயிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு பிரசவம் நிகழ்ந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், ஒரு காதல் மலர்ந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு குடை தொலைந்திருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு குரல் அடங்கிப் போயிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில் ஒரு திரைப்படம் ரசிக்கப்பட்டிருக்கலாம் ! அந்தக்கடைசி மழையில், ஒரு தேநீர் சுவைக்கப்பட்டிருக்கலாம் ! அந்தக்கடைசி மழை இந்த உலகத்தின் கடைசி மழையாகவும் இருக்கலாம் ! சொல்ல முடியாது !