விலை
அவளொரு
தாசி !
பாவ ஆற்றில்
இச்சை மீன்கள்
தின்னும்
பாசி !
ஆண்கள்
மட்டுந்தான்
அவளுக்கு
ராசி !
அவள் நடையில்
எப்போதுமிருக்கும் - ஒரு
பீடு !
இன்பம் தருவதில்
வானுலக ரம்பை
அவளுக்கு,
ஈடு !
ஒதுக்குப்புறமானது
அவள்,
வீடு !
அவள் மேனி,
ஒரு சிலையை
நிகர்க்கும் !
எப்படிப்பட்ட
பிரம்மச்சர்யத்தையும்
அவள் பார்வை
தகர்க்கும் !
எப்படிப்பார்த்தாலும்
அவள்,
அழகி !
போனால்
திரும்பிவரலாம்
இன்பத்தை
அவளிடம்
பழகி !
அவளிடம்,
துன்பம் நடுங்கும்
பருந்தைக்கண்ட
அரவு போல !
கவலை மறையும்
பகலவன் உதித்த
இரவு போல !
அவளிடம் சென்றால்,
அந்நாள் ஆகும்
நம்
இன்பக்கணக்கில் - ஒரு
வரவு போல !
அன்று.....................
அவள்,
குளித்து விட்டு
செயற்கையாக
வேர்த்திருந்தாள் !
மயக்கும் வித்தைகளை
மனதோடு
சேர்த்திருந்தாள் !
திறந்த வாசலில்
யாரையோ - எதிர்
பார்த்திருந்தாள் !
அவன்
வந்தான் !
அவன்,
தோற்றத்தில்
முப்பதை
முடித்திருந்தான் !
சொல்ல முடியாத
சோகத்தை
முகம் முழுக்க
வடித்திருந்தான் !
அவனைக்கண்டு
அவள்,
சிரித்தாள் !
பார்வையால்
அவனை
உரித்தாள் !
பெருமூச்சால்,
அந்த அறையையே
எரித்தாள் !
அவன்,
சட்டென எழுந்தான்
கட்டிலிலிருந்து !
எடுத்து விட்டான்
கவலைக் குழந்தையை
தன் மனமெனும்
தொட்டிலிலிருந்து !
அவனுக்கு,
இணையவில்லையாம்
இருமனம் !
ஆகவில்லையாம்
திருமணம் !
ஒவ்வொன்றாய்
முடித்தானாம்
கடமையை !
முடித்து விட்டு
உணர்ந்தானாம்
வாலிபம் தொலைத்த
மடமையை !
அவன்,
நாடி வரவில்லையாம்
அவளிடம்
சுகத்தை !
தடவ வேண்டுமாம்
அன்பு வார்த்தைகளால்
அவன்,
அகத்தை !
தொடக்கூட
மாட்டானாம்
அவன்,
அவள்,
நகத்தை !
அவள்,
அமைதியாக
அவனை
ஏறிட்டாள் !
பிறகு,
பின்வரும்
வார்த்தைகளால்
அவனை இரண்டாகக்
கூறிட்டாள் !
" ஐயா,.
ஒட்டிக்கொள்கிறேன்
உங்களிடம்
அட்டை போல !
அணியலாம்
நீங்கள் என்னை
சட்டை போல !
கிடக்கிறேன்
இரவெல்லாம் - மர
கட்டை போல !
உடம்புக்கு
மட்டுந்தான்
இங்கே,
விலை !
உங்கட்கு
உகந்தல்ல
என்,
நிலை !
இன்ப விருந்தென்றால்,
இதோ இருக்கிறது
இலை !
அனுதினமும்
உடம்பால்
மட்டுந்தான்
எனக்கு
சாவு !
மனதையும்
கொடுக்க மாட்டேன்
மற்றவனுக்குக்
காவு !
தர முடியாது,
உங்கள்
மனப்பசிக்கு
ஆறுதல்தோசை வார்க்க
மாவு !
கற்கவில்லை
நான் இன்னும்
மனதை விற்கும்
கலையை !
எதிர்பார்க்க வேண்டாம்
தெப்பக்குளத்தில்
கடல்,
அலையை !
மனது
மட்டுமாவது
என்னிடம்
எஞ்சட்டும் !
நரகத்தின் கதவுகள்,
இதற்காகவாவது
என்னைக்கண்டு - சற்று
அஞ்சட்டும் !
நீங்கள்
போகலாம் ! "
இப்படியாக,
இறுதிவரை
அவள்,
அவனுக்கு
இணங்கவில்லை !
அதன் பிறகு
அவனை
அவள்,
வணங்கவில்லை !
அவனுக்கு
அந்தப்பணம்
திருப்பித்தரப்பட்டது !
அவனுக்கு
அந்தக்கதவு
சாத்தப்பட்டது !
அவளொரு
தாசி !
பாவ ஆற்றில்
இச்சை மீன்கள்
தின்னும்
பாசி !
ஆண்கள்
மட்டுந்தான்
அவளுக்கு
ராசி !
அவள் நடையில்
எப்போதுமிருக்கும் - ஒரு
பீடு !
இன்பம் தருவதில்
வானுலக ரம்பை
அவளுக்கு,
ஈடு !
ஒதுக்குப்புறமானது
அவள்,
வீடு !
அவள் மேனி,
ஒரு சிலையை
நிகர்க்கும் !
எப்படிப்பட்ட
பிரம்மச்சர்யத்தையும்
அவள் பார்வை
தகர்க்கும் !
எப்படிப்பார்த்தாலும்
அவள்,
அழகி !
போனால்
திரும்பிவரலாம்
இன்பத்தை
அவளிடம்
பழகி !
அவளிடம்,
துன்பம் நடுங்கும்
பருந்தைக்கண்ட
அரவு போல !
கவலை மறையும்
பகலவன் உதித்த
இரவு போல !
அவளிடம் சென்றால்,
அந்நாள் ஆகும்
நம்
இன்பக்கணக்கில் - ஒரு
வரவு போல !
அன்று.....................
அவள்,
குளித்து விட்டு
செயற்கையாக
வேர்த்திருந்தாள் !
மயக்கும் வித்தைகளை
மனதோடு
சேர்த்திருந்தாள் !
திறந்த வாசலில்
யாரையோ - எதிர்
பார்த்திருந்தாள் !
அவன்
வந்தான் !
அவன்,
தோற்றத்தில்
முப்பதை
முடித்திருந்தான் !
சொல்ல முடியாத
சோகத்தை
முகம் முழுக்க
வடித்திருந்தான் !
அவனைக்கண்டு
அவள்,
சிரித்தாள் !
பார்வையால்
அவனை
உரித்தாள் !
பெருமூச்சால்,
அந்த அறையையே
எரித்தாள் !
அவன்,
சட்டென எழுந்தான்
கட்டிலிலிருந்து !
எடுத்து விட்டான்
கவலைக் குழந்தையை
தன் மனமெனும்
தொட்டிலிலிருந்து !
அவனுக்கு,
இணையவில்லையாம்
இருமனம் !
ஆகவில்லையாம்
திருமணம் !
ஒவ்வொன்றாய்
முடித்தானாம்
கடமையை !
முடித்து விட்டு
உணர்ந்தானாம்
வாலிபம் தொலைத்த
மடமையை !
அவன்,
நாடி வரவில்லையாம்
அவளிடம்
சுகத்தை !
தடவ வேண்டுமாம்
அன்பு வார்த்தைகளால்
அவன்,
அகத்தை !
தொடக்கூட
மாட்டானாம்
அவன்,
அவள்,
நகத்தை !
அவள்,
அமைதியாக
அவனை
ஏறிட்டாள் !
பிறகு,
பின்வரும்
வார்த்தைகளால்
அவனை இரண்டாகக்
கூறிட்டாள் !
" ஐயா,.
ஒட்டிக்கொள்கிறேன்
உங்களிடம்
அட்டை போல !
அணியலாம்
நீங்கள் என்னை
சட்டை போல !
கிடக்கிறேன்
இரவெல்லாம் - மர
கட்டை போல !
உடம்புக்கு
மட்டுந்தான்
இங்கே,
விலை !
உங்கட்கு
உகந்தல்ல
என்,
நிலை !
இன்ப விருந்தென்றால்,
இதோ இருக்கிறது
இலை !
அனுதினமும்
உடம்பால்
மட்டுந்தான்
எனக்கு
சாவு !
மனதையும்
கொடுக்க மாட்டேன்
மற்றவனுக்குக்
காவு !
தர முடியாது,
உங்கள்
மனப்பசிக்கு
ஆறுதல்தோசை வார்க்க
மாவு !
கற்கவில்லை
நான் இன்னும்
மனதை விற்கும்
கலையை !
எதிர்பார்க்க வேண்டாம்
தெப்பக்குளத்தில்
கடல்,
அலையை !
மனது
மட்டுமாவது
என்னிடம்
எஞ்சட்டும் !
நரகத்தின் கதவுகள்,
இதற்காகவாவது
என்னைக்கண்டு - சற்று
அஞ்சட்டும் !
நீங்கள்
போகலாம் ! "
இப்படியாக,
இறுதிவரை
அவள்,
அவனுக்கு
இணங்கவில்லை !
அதன் பிறகு
அவனை
அவள்,
வணங்கவில்லை !
அவனுக்கு
அந்தப்பணம்
திருப்பித்தரப்பட்டது !
அவனுக்கு
அந்தக்கதவு
சாத்தப்பட்டது !
விலையில்லை இதற்கு
ReplyDeleteவெகுமதிதான் உங்களுக்கு..
நல்ல கவிக்காட்சிப் பதிவு!
வரிகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்!
கவிதையின் காட்சிப்பதிவை ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு நன்றி இளமதி
Deleteசொல்லாடல்கள் எல்லாமே மிகவும் சுவையாக உள்ளன. பாராட்டுக்கள்.
ReplyDeleteஇக்கவிதையின் சொல்லாடல்களை ரசித்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா !
Deleteஅருமையான கவிதை! வாலி போல எழுத முயற்சிப்பது புலனாகிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆம் நண்பரே ! தமிழ்நாடு தன்னை இழந்த வலி தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி என் குருவான வாலி என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் ! அதனால் தான் ! கவிதைகளில் பிழையிருப்பின் பொறுத்தருளவும் !
Delete