Skip to main content
 தயவு செய்து
சண்டை போடுங்கள்



ஒரு சண்டை
தேவைப்படுகிறது !

மாதத்தில் ஓர் நாள்,
வாரத்தில் ஓர் நாள்
வாழ்வின் சலிப்பு நீக்க
ஒரு சண்டை தேவைப்படுகிறது !

மண்டை முழுக்கக்
குடைச்சல் இருந்தால்
அண்டை வீட்டானிடம்
சண்டை போடுங்கள்
சரியாகிவிடும் !

பாட்டு ஓடும் பேருந்தில்
சீட்டுக் கிழித்து
சலித்த நடத்துனன்
நோட்டு நீட்டினால் - ஒரு
காட்டுக் காட்டுவது
சண்டையை எதிர்பார்த்துத்தான் !
நாளெல்லாம்
நின்று வந்த கடுப்பை
எவன் வாயையாவது
தின்று தீர்க்கலாம்
என்று நினைக்கலாம் அவன் !

சமையல் பாத்திரத்தின்
' கழுவல் ' சரியில்லை எனில்
அன்றைய இரவில்
' தழுவல் ' சுகமாயிருக்கிறது
கணவனுக்கும் மனைவிக்கும் !
காரணம்,
பாத்திரத்தின் பொருட்டு
கழுவலுக்கும்
தழுவலுக்கும் நடுவில்
தம்பதியரிடையே
தம்படியளவேனும்
சண்டை நடந்திருக்கும் !

அம்மா அடிப்பாள்
என்று தெரிந்திருந்தும்
சும்மா சும்மா
புழுதியில் புரள்கிறான்
பள்ளிச் சிறுவன் !
ஏன் தெரியுமா ?
அடி வாங்கி அழுத பிறகு,
அம்மா ஊட்டும் சோறு
அவ்வளவு ருசியாயிருக்கிறது
அவனுக்கு !

காதலில்
சலிப்பு எனும்
பழுது போக்க
பொழுது போக்காகவாவது
பொய்ச் சண்டை
போடுகின்றனர்
பரந்த உலகின்
சிறந்த காதலர்கள் !

எதற்கோ
எவனுடனோ
தெருவில்
சண்டை போடும்போது
எங்கிருந்தோ வந்து
ஏனென்றும் கேளாமல்
எதிர்த்தவனை
எகிறி முறைக்கும்போது தான்
தம்பியின் பாசம்
புரிகிறது நமக்கு !

சண்டை
சீக்கிரத்தில் முடிந்து போவது !

சடுதியில்
சமாதானத்தின்
விடுதி நோக்கி ஓடுவது !

மடை திறந்த
வெள்ளம் போல
உள்ளம் திறந்து
போடும் சண்டை
பகையின் வேர்களைப்
பட்டுப் போகச் செய்கிறது !

நெஞ்சகத்தில் இருக்கும்
வஞ்சகத்தின்
நஞ்சகத்தை
நிமிடங்களில்
நிர்மூலமாக்குகிறது !

தன்னுயிர்க்
காதலியை விடவும்
சண்டை போட்ட
சகாவிடம்
பேசத்துடிக்கிறான்
இன்னொரு சகா !

வாழ்வே  வெறுத்து
விரக்தியாய் இருக்கிறதா ?

தலைக்கு மேலே
தற்கொலை எண்ணம்
தொங்கிக் கொண்டிருக்கிறதா ?

தயவு செய்து
சண்டை போடுங்கள் !!!


Comments

  1. இவ்வளவு நல்லா எழுதுவீங்க நீங்கன்னு என்கிட்ட ஏன சொல்லவே இல்ல? என் கருத்துக்களை பாராட்டறவரு அழகான கவிதை எழுதவறரு்ன்னு சொன்னா சந்தோஷப்பட்டிருப்பேன் இல்ல..? (என்ன கோபம்னு பாக்கறீங்களா? சண்டை போடறேன் உங்களோட...) ‌உங்க கருத்து ரொம்பவே ரசிக்க வெச்சது நிரூவை. Thanks!

    ReplyDelete
  2. வருகை புரிந்த தங்களுக்கு நன்றிகள் பல. தாங்களும் எழுதுங்கள் ! நான் இப்போது தான் ஆரம்பக் கட்ட எழுத்தாளனாக இருந்து வருகிறேன். குடிசை போல இருக்கும் எனது வலைப்பூவிற்கு வந்த தங்களுக்கு பெரிய மனது தான் நிரூ !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது